சில நாட்களுக்கு முன்பு Godman எனும் Web series ன் ட்ரெய்லர் ஒன்று வெளியானது. அதில் ஹிந்துக்களை இழிவு படுத்துவது போல் பல காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றிருந்ததால், ஹிந்துக்கள் இடமிருந்து மிகுந்த கோபமும் எதிர்ப்பும் கிளம்பியது. அதையடுத்து அந்த டிரைலர் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு அந்த Web series தற்காலிகமாக திரையிட மாட்டோம் என ZEE நிறுவனமும் அறிவித்தது.
தற்போது பிரபல எழுத்தாளரும் சமூக வலைத்தள பேச்சாளருமான மாரிதாஸ் அவர்கள் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட Godman Web series தயாரிப்பாளர் விபரங்களும் மற்றும் வரலாறை தோண்டி எடுக்கப் போவதாகவும் அதற்கான வேலையை ஆரம்பித்ததாகவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Godman Web-series தயாரிப்பாளர்கள் விவரம் , வரலாறு தோண்டும் வேலை ஆரம்பம்.
இந்து பெயரிலிருந்து கொண்டு இந்துக்களை இழிவு செய்வது தான் இங்கே காலம் காலமாக மிசினரிகள் கடைப்பிடிக்கும் யுக்தி.
திக இதில் எந்த கருத்து தெரிவித்தாலும் திமுக ஸ்டாலின் இந்துகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். pic.twitter.com/nAN8BPM05f
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) June 4, 2020