வாச்சாத்தி சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவு!

வாச்சாத்தி சம்பவம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவு!

Share it if you like it

வாச்சத்தி வன்கொடுமை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த தீர்பை எதிர்த்து செய்யப்பட்ட முறையீடு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல் முருகன் இன்று தள்ளுபடி செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18- பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு அரசு வேலை மற்றும் சுய செய்ய உதவிட வேண்டும் என்றும் வன்கொடுமை நடந்த போது பதவியில் இருந்த மாவட்ட ஆட்சியர், எஸ்பி, வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.


Share it if you like it