சட்டமன்றத்தில் நேற்று கவர்னருக்கு எதிராக கோஷமிட்டு, தீர்மானம் நிறைவேற்றி சவடால் காட்டிய தி.மு.க., இன்று கவர்னரிடம் டோட்டலாக சரண்டராகி இருப்பதுதான் ஹைலைட்!
தி.மு.க.வின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்ன?
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு திராவிடத்தை முன்னெடுக்கிறது. ஆனால், கவர்னரோ தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தமிழக அரசும், தி.மு.க. தலைமையும் திராவிட நாடு பற்றி பேசும்போதெல்லாம், கவர்னர் தமிழ் பற்றி பேசி திக்குமுக்காட வைக்கிறார். இப்படித்தான் திராவிட நாடு என்று கூறிவந்த தி.மு.க. அண்கோ கம்பெனியை தமிழ்நாடு என்று சொல்ல வைத்து கதற விட்டார். அதேபோல, பல்கலை வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை தூக்க தி.மு.க. அரசு திட்டமிட்டு வரும் நிலையில், தன்னிச்சையைக பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்து அதிரடி காட்டி வருகிறார் கவர்னர்.
இப்படிப்பட்ட நிலையில்தான், நிகழாண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. திராவிட நாடு, தமிழ்நாடு உள்ளிட்ட விவகாரங்களால் கவர்னர் மீது கோவத்தில் இருந்த தி.மு.க.வினர், சட்டமன்ற மரபை மீறி கவர்னருக்கு எதிராக கோஷமிட்டதோடு, தீர்மானமும் கொண்டு வந்தனர். இதனால், கவர்னர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, கவர்னருக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாகக் கருதி, தி.மு.க.வினர் குஷியில் இருந்தனர். மேலும், கெட் அவுட் ரவி என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர். அதோடு, சென்னை மாநகரம் முழுவதும் கெட் அவுட் ரவி போஸ்டர் அடித்து ஒட்டி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் கவர்னருக்கு ஆதரவாக, ஆளுநரின் ஆளுமையே என்று பா.ஜ.க.வினர் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். நிலைமை இப்படிச் சென்று கொண்டிருக்க, இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்தான் தி.மு.க. எம்.எல்.ஏக்களை அடக்கி வாசிக்கும்படி ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் கவர்னரை தாக்கி பேசக்கூடாது. அதேபோல, கவர்னரை கண்டித்து போஸ்டர் அச்சடித்து ஒட்டக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறாராம்.
தி.மு.க.வின் இந்த திடீர் பல்டிக்கு என்ன காரணம் என்று விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, சட்டமன்றக் கூட்டத்திலிருந்து வெளியேறிய கவர்னர், நேராக கவர்னர் மாளிகைக்கு வந்திருக்கிறார். பின்னர், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு போன் செய்து நடந்த விவரங்களை கூறியிருக்கிறார். உடனே, டெல்லிக்கு புறப்பட்டு வரும்படி கவர்னரிடம் கூறியிருக்கிறார் அமித்ஷா. அதற்கு, பொங்கல் விழா உள்ளிட்ட சில அவசர நிகழ்ச்சிகள் இருப்பதாக கவர்னர் தெரிவித்திருக்கிறார். ஆகவே, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தன்னை வந்து சந்திக்கும்படி அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் கவர்னர் மாளிகையில் இருந்து எப்படியோ ஆளும் கட்சியினருக்கு கசிந்து விட்டது. விஷயம் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டவே, ஆடிப்போயிருக்கிறார். ஏற்கெனவே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், தற்போது அரசு ஊழியர்களும் எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். அதோடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரமும் சந்தி சிரித்து வருகிறது. ஆகவே, இதை காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், தேவையில்லாமல் கவர்னரிடம் வம்பிழுத்து விட்டோமோ என்று யோசித்திருக்கிறார். இதன் விளைவுதான் கவர்னருக்கு எதிராக பேசக்கூடாது. போஸ்டர் ஒட்டக்கூடாது என்கிற சரண்டர் உத்தரவு என்கிறார்கள்.
அந்த பயம் இருக்கட்டும்!