கவர்னர் செயல்பாடு சூப்பர்… எடப்பாடி பழனிசாமி சர்டிபிகேட்!

கவர்னர் செயல்பாடு சூப்பர்… எடப்பாடி பழனிசாமி சர்டிபிகேட்!

Share it if you like it

கவர்னரின் செயல்பாடு அருமையாக இருக்கிறது. தங்களுக்கு சாதகமாக செயல்பட்டால் நல்லவர் என்றும், எதிராக செயல்பட்டால் கெட்டவர் என்றும் தி.மு.க.வினர் சொல்வது வாடிக்கைதான் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து விவரிப்பதற்காக, சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என். ரவியை, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் நடக்கும் அவலங்களை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. தி.மு.க. அரசின் 18 மாதகால ஆட்சியில், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைதான். திறமையற்ற பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்வதால்தான் இதுபோன்ற நிகழ்கள் நடைபெறுகின்றன.

மத்திய உளவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்தும், மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே, கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. சரியான முறையில் அரசு கவனம் செலுத்தி இருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். இதன் மூலம் தி.மு.க. அரசு ஒரு திறமையற்ற அரசு என்பது நிரூபணமாகி இருக்கிறது. அரசின் நிர்வாகக் குறைபாடு காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் சீரழியும் சூழல் நிலவுகிறது. ஆகவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் மனு வழங்கி இருக்கிறோம்.

தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன் என்பதுதான் திராவிட மாடல். லஞ்சம் இல்லாத துறையே இல்லை. தங்ளுக்கு சாதகமாக செயல்பட்டால் கவர்னர் நல்லவர் என்று கூறுவதும், தவறுகளை சுட்டிக்காட்டினல் மோசம் என்று கூறுவதும் தி.மு.க.விற்கு வழக்கம். கவர்னரின் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது, இதனால்தான் தி.மு.க.வில் இருந்து கூக்குரல் எழுகிறது. அரசின் செயல்பாட்டில் கவர்னரின் தலையீடு இல்லை. அரசாங்கத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை, கூட்டுறவுத்துறை மீது நிதியமைச்சர் கூறிய குற்றச்சாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.


Share it if you like it