உள்துறைக்கு பகீர் கடிதம்… தி.மு.க.வுக்கு கவர்னர் செக்!

உள்துறைக்கு பகீர் கடிதம்… தி.மு.க.வுக்கு கவர்னர் செக்!

Share it if you like it

தமிழகத்தில் நடைபெறும் மதமாற்றம், பயங்கரவாதிகள் ஊடுருவல், வெளிநாடுகளிலிருந்து குவியும் பணம் ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இ-மெயிலில் அனுப்பியிருக்கும் பகீர் கடிதம்தான் தி.மு.க.வினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. ஆட்சியில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர், தி.மு.க. அரசுக்கு கடும் நெருக்கடியும், குடைச்சலும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கவர்னர் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டதால், டெல்லிக்குச் செல்லும் போதெல்லாம் தி.மு.க. அரசைப் பற்றி நல்ல ரிப்போர்ட்டே தந்து வந்தார். அதேபோல, புதிய சட்டமன்றம் துவக்க நாளில் தனது உரையின் போதும் தி.மு.க. அரசை பாராட்டினார்.

அதேசமயம், நீட் தேர்வு விவகாரத்தில் மட்டும் கவர்னர் கெடுபிடி காட்டியே வந்தார். இதனால் விரக்தியடைந்த ஸ்டாலின், பிரதமர் மோடியுடனான வீடியோ கான்ஃபரன்ஸிங் மீட்டிங்கில் நீட் தேர்வு விவகாரத்தில் கவர்னரின் செயல்பாடு திருப்பி இல்லை என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார். மேலும், பிரதமர் மற்றும் கவர்னரின் முன்னிலையிலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றும் குறிப்பிட்டார். இதுதான் கவர்னருக்கு ஸ்டாலின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. மேலும், பா.ஜ.க.வினரும் இதை மிகப்பெரிய அவமதிப்பாக கருதினர். எனவே, தி.மு.க. அரசுக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தனர்.

இதுபற்றி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மத்திய அதிகாரிகள்  ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்தே, தமிழகத்தில் நடக்கும் மதமாற்றம், பயங்கரவாதிகள் ஊடுருவல், வெளிநாடுளில் இருந்து குவியும் பணம் ஆகியவை குறித்து மத்திய உள்துறைக்கு இ-மெயிலில் ஒரு பகீர் கடிதத்தை அனுப்பி இருக்கிறார் கவர்னர் ரவி. இதனடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் துறை, தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இதுதான் தி.மு.க.வினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it