அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை தமிழக அரசு மறைமுகமாக உயர்த்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவரது, ஆட்சியில் சட்டம், ஒழுங்கு என்பது பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. அதே போல, எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம் என தமிழகம் மெல்ல மெல்ல இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், மத்திய அரசின் மீது வீண் பழியை சுமத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை, இந்த அரசு உயர்த்தி வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இந்த நிலையில் தான், 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில், அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் அரிசி, பருப்பு, கோதுமை, உள்ளிட்ட பொருட்களுக்கு 5% சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என முடிவு செய்யப்பட்டன. அதேபோல, பால், தயிர், லஸ்ஸி மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கும் 5% சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை 18-ம் தேதியில் இருந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்கள் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4. ரூ இருந்து 10. ரூ உயர்த்தி இருக்கின்றன. இது, 5% சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விட 15% அளவிற்கு அதாவது, மூன்று மடங்கு விற்பனை விலை கூடி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இதுதான், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
தமிழக அரசின், பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின். 21. 07. 2022 முதல் தயிர், நெய் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களை மிக அதிக அளவிற்கு உயர்த்தி இருக்கின்றன. இதனிடையே, 20. 07. 2022 என்ற தேதியிட்டு சுற்றறிக்கையை தமிழக அரசு அனுப்பி இருக்கிறது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அதுவும் ஒரே நாளில் இந்த விற்பனை விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு, எல்லாம் மத்திய அரசு தான் காரணம் என விடியல் ஆட்சியாளர்கள் பொய் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.