ஜி.யு.போப் திருக்குறள் மொழி பெயர்ப்பில் தவறு: அண்ணாமலை அதிரடி பேட்டி!

ஜி.யு.போப் திருக்குறள் மொழி பெயர்ப்பில் தவறு: அண்ணாமலை அதிரடி பேட்டி!

Share it if you like it

ஜி.யு.போப் திருக்குறளை மொழி பெயர்த்தில் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதில் நிறைய தவறுகள் இருக்கின்றன என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஆளுநர் வெறுமனே வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஆளுநர் துணைவேந்தர்களிடம் பேசுவார். நிகழ்ச்சிகளுக்கு போவார், பேசுவார். தமிழ்நாட்டை பற்றி பேசுவார். கலாசாரத்தை பற்றி பேசுவார். பேசுவதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. அதைக்கூட பேசக்கூடாது என்பது எந்த விதத்தில் சரி. ஜி.யு.போப் திருக்குறளை மொழி பெயர்த்ததில் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதைத்தான் ஆளுநர் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.

ஜி.யு. போப் மொழிபெயர்த்த திருக்குறள் மீது சில கருத்துக்களை ஆளுநர் முன்வைத்து இருக்கிறார். உது அவருடைய கருத்து. அதை சுதந்திரமாக ஆளுநர் முன்வைத்திருக்கிறார். ஆளுநர் அரசியல் பேசவில்லை. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று நானே பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆளுநர் அரசியல் பேசவில்லை. அவருடைய கருத்தை சொல்கிறார். அப்படித்தான் திருக்குறளை பற்றியும் கூறியிருக்கிறார். அது அவருடைய சொந்த கருத்து. அதேபோல, ஜி.யு.போப் மொழிபெயர்த்ததில் அவருடைய சொந்த கருத்தும் உள்ளது. அதை எப்படி தவறு என்று சொல்வார்கள்” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it