கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியருக்கு மாணவர்கள் பயந்து நடுங்கினார்கள். ஆனால், தற்போது மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் நடுங்கும் காலமாக இருக்கிறது.
குறிப்பாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் அத்துமீறல் ரொம்பவே அதிகரித்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பள்ளியில் நடந்திருக்கிறது. அதாவது, பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். எதிரே அதே பள்ளியில் பயிலும் ஆசிரியர் ஒருவர் பைக்கில் வந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த மாணவர், தனது இரு சக்கர வாகனத்தை ஆசிரியர் வந்த வாகனத்தின் மீது மோதுவது போல வந்திருக்கிறார்.
இதையடுத்து, பள்ளிக்குச் சென்ற அந்த ஆசிரியர், மேற்படி மாணவரை அழைத்து கண்டித்திருக்கிறார். மேலும், அந்த மாணவர் யூனிபார்ஃம் போடாதது குறித்தும் கேட்டிருக்கிறார். உடனே, அந்த மாணவர் பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சென்று தனது மாமாவை அழைத்து வருகிறான். அவர் மது போதையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. இருவரும் சேர்ந்து பள்ளி ஆசிரியர்களை மிரட்டுகிறார்கள். குறிப்பாக அந்த மாணவர், ஆசிரியரை நீ வா போ என்று ஒருமையில் பேசுவதோடு, எனக்கு யூனிபார்ஃமும் வேண்டாம், பரீட்சையும் வேண்டாம். நீ வெளிய வந்து பாரு, நான் யாருன்னு காட்டுறேன் என்று சொல்லி விட்டுச் செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இதுதான் திராவிட மாடல் கல்வி போல என்று கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், அந்த மாணவரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, இதுபோன்ற மாணவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், கெட்ட உதாரணமாகி விடும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, மற்ற மாணவர்களும் இதுபோன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர். பள்ளி ஆசிரியர்களை அந்த மாணவர் எப்படி மிரட்டுகிறார் என்பதை கீழே இருக்கும் வீடியோவில்ல நீங்களே பாருங்கள்….