குஜராத் மாநிலத்தில் தந்தையை தாக்கியதை தடுக்க முயன்ற ஹிந்து சிறுமியை கத்தியால் குத்திக் கொலை செய்த ஆரிஃப், அஷ்ரஃப், அர்மான், இர்ஃபான், அமீன், ஆதில் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் சிஹோர் பெல்ட் பகுதியிலுள்ள வரல் கிராமத்தைச் சேர்ந்தவர் லஷ்கர்பாய் பரையா. இவர்தான் இக்கிராமத்தின் முன்னாள் தலைவர். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தனது தம்பி ஜெகதீஷ் பரையா மகள் ராதிகாவை தத்தெடுத்து வளர்த்து வந்தார். தற்போது ராதிகாவுக்கு 16 வயது. இந்த சூழலில், வரல் கிராமத்தில் செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக ஆரிஃப் அல்லாரக்கா என்பவன் லஷ்கர்பாய் பரையாவை சந்தித்து பேசியிருக்கிறான். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றிய நிலையில், ஆர்ஃப் மற்றும் அவனுடன் வந்த 5 பேரும் சேர்ந்து லஷ்கர்பாய் பரையாவை கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கி இருக்கிறார்கள்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராதிகா, ஓடி வந்து தடுத்திருக்கிறார். அப்போது, ஆரிஃப் உள்ளிட்டோர் ராதிகாவையும் சரமாரியாகக் கத்தியால் குத்தி இருக்கிறார்கள். இதை தடுக்க முயன்ற லஷ்கர்பாய் பரையாவின் உறவினர்களுக்கும் கத்திக் குத்து விழுந்தது. பின்னர், ஊர் மக்கள் கூடவே, 6 பேரும் தப்பி ஓடிவிட்டார். பின்னர், பலத்த காயமடைந்த அனைவரையும், ஊர்மக்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனின்றி ராதிகா உயிரிழந்தார். மேலும், லஷ்கர்பாய் பரையா உள்ளிட்ட சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, ஊர்மக்கள் திரண்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படை போலீஸார் தீவிர தேடுவேட்டையில் ஈடுபட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளான குஜராத் மாநிலத்தில் தந்தையை தாக்கியதை தடுக்க முயன்ற ஹிந்து சிறுமியை கத்தியால் குத்திக் கொலை செய்த ஆரிஃப், அஷ்ரஃப், அர்மான், இர்ஃபான், அமீன், ஆதில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர், ராதிகாவின் இறுதிச் சடங்கு நடந்தது. இதில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இறுதிச் சடங்குக்குப் பிறகு ஊர்க்கூட்டம் நடந்தது. இதில், இனி ஹிந்துக்கள் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குவது என்றும், முஸ்லீம்களின் கடைகளை புறக்கணிப்பது என்பது முடிவு செய்யப்பட்டது. இக்கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.