பெண்களுக்கு 50 மில்லியன் டாலர்: ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு!

பெண்களுக்கு 50 மில்லியன் டாலர்: ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு!

Share it if you like it

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பெண்களுக்கு 50ஸ மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ‘சேவா’ என்கிற பெண்கள் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான இருந்தவர் எலா பட். இவர், சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். எலா பட்டுடன் நீண்ட காலமாக நட்பில் இருந்தவர் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன். ஆகவே, எலா பட்டுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 2 நாள் பயணமாக கடந்த 5-ம் தேதி குஜராத் வந்தார் ஹிலாரி. அன்றையதினம் எலா பட்டிற்கு அஞ்சலி செலுத்திய ஹிலாரி கிளின்டன், ‘சேவா’ அமைப்பின் 50-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்றார்.

பின்னர், சுரேந்திரா மாவட்டத்தின் குடா கிராமத்திற்குச் சென்றார். அங்கு அமைந்திருக்கும் உப்பளங்களில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “மறைந்த எலா பட் மற்றும் சேவா அமைப்புடன் சேர்ந்து 50 ஆண்டுகள் பணிபுரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. தற்போது நாங்கள் அடுத்த 50 ஆண்டுகள் குறித்து யோசித்து வருகிறோம். தற்போது, கிளின்டன் உலக அமைப்பானது, இந்திய அமெரிக்க அமைப்பான சேவா மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து பெண்களுக்காக 413 கோடி கோடி ரூபாயை உலகளாவிய காலநிலை நிதியாக அறிவிக்கிறது.

காரணம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம், முறைசாரா துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கிறது. இந்த சவாலை சமாளிக்க, உலகளாவிய ‘காலநிலை பின்னடைவு நிதியம்’ உதவும். நீங்கள் கட்டுமானத்தில் இருந்தாலும் சரி, அல்லது கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இருந்தாலும் சரி, பிளாஸ்டிக்காக இருந்தாலும் சரி, அல்லது தெருவோர வியாபாரியாக இருந்தாலும் சரி, அல்லது விவசாயியாக இருந்தாலும் சரி, வருமானம் ஈட்டுவது உங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். அந்தளவுக்கு கடுமையான வெப்பத்தின் நாட்கள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இதைத் தீர்க்க சேவா உங்களுக்கு உதவும்” என்றார். நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் சுமார் 70 சதவீதம் குஜராத்தில் இருந்துதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it