சாட் ஜிபிடி, ஜெமினிக்கு போட்டியாக களமிறங்கும் ஹனுமன் ‘ஏ.ஐ’ !

சாட் ஜிபிடி, ஜெமினிக்கு போட்டியாக களமிறங்கும் ஹனுமன் ‘ஏ.ஐ’ !

Share it if you like it

தொழில்நுட்பதின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக முதலில் ‘சாட் ஜிபிடி’ என்ற தொழில்நுட்பம் வந்தது.

பின்னர் சாட் ஜிபிடி-க்கு போட்டியாக கூகுளின் ஜெமினி வந்தது. இந்நிலையில் இவ்விரண்டுக்கும் போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஹனூமான் என்ற ‘ஏ.ஐ’ மாடலை உருவாக்கி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்ற சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சாட்பாட் (chat bot) இதுவரையில் செயற்கை நுண்ணறிவு எட்டாத உயரத்துக்கு அதை கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். கணினி, அறிவியல், கணிதம், கலை சார்ந்த எந்த கேள்வியை கேட்டாலும், அதி நுணுக்கமான பதில்களை அதுகொடுக்கிறது.

அதேபோல், கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ என்ற பெயரிலும் அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி என்னும் பெயரில் இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஐஐடி பாம்பே உடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக ‘ஹனூமான்’ என்ற மாடலை புகுத்தியுள்ளது. 11 இந்திய மொழிகள் அடங்கிய ஹனூமான் மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.


Share it if you like it