ராகுல் காந்தியை கொன்று விட்டேன்: ராகுல் பேச்சால் நிருபர்கள் கிறுகிறு!

ராகுல் காந்தியை கொன்று விட்டேன்: ராகுல் பேச்சால் நிருபர்கள் கிறுகிறு!

Share it if you like it

நான் ராகுல் காந்தியை கொன்றுவிட்டேன், நீங்கள் பார்ப்பது ராகுல் அல்ல என்று சொல்லி, சொல்லி நிருபர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை சுற்றி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்துக்குள் நுழைந்திருக்கிறது.

இந்த சூழலில், ராகுல் காந்தி நேற்று ஹரியானாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாரத் ஜோடோ யாத்திரை உங்கள் பிம்பத்தை மாற்றி இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா என்று ஒரு செய்தியாளர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தியை நான் கொன்றுவிட்டேன். நீங்கள் பார்ப்பது ராகுல் காந்தியை அல்ல. இதனை புரிந்துகொள்ள ஹிந்து இலக்கியங்களும், சிவபெருமானை பற்றியும் நீங்கள் படிக்க வேண்டும், அப்போது நான் சொல்வது உங்களுக்கு புரியும்.

ராகுல் காந்தி என்கிற நபர் மக்கள் மனதில்தான் இருக்கிறார். ராகுல் காந்தி என்கிற நபர் உங்கள் மனதில் இருந்தால், நான் அவரை கொன்று விட்டேன். அந்த ராகுல் காந்தி இப்போது இல்லை. என்னுடைய மனதிலும் அந்த ராகுல் காந்தி இல்லை, அவர் போய்விட்டார். நீங்கள் பார்ப்பது ராகுல் காந்தி அல்ல. நிஜ உருவத்தில் என்னை பார்க்கலாம். உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லையா. வியபப்டையாதீர்கள். உங்கள் மனதில் இருக்கும் ராகுல் காந்தி நான் அல்ல. அவர் பா.ஜ.க. மனதில் இருப்பார். ஏன் வியப்பாக பார்க்கிறீர்கள், எனக்கென்று எந்தவிதமான இமேஜும் இல்லை.

என்னுடைய தோற்றத்தை பராமரிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என் தோற்றத்தை பார்த்து நல்லவிதமாக பேசினாலும், அல்லது தவறாக பேசினாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு என்னுடைய பணியைச் செய்ய வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தன்னை வணங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். பாரத் ஜோடோ யாத்ரா என்பது சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் பயத்திற்கு எதிரானது. பாரத் ஜோடோ யாத்திரை சுய தியானம் பற்றியது” என்று நிருபர்களை குழப்பி இருக்கிறார். இதனால், பைத்தியம் பிடிக்காத குறையாக அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்கள் நிருபர்கள். அய்யோ பாவம்!


Share it if you like it