இமாச்சல் முதல்வர் ஜெய்ராமுக்கு காலிஸ்தான் கொலை மிரட்டல்!

இமாச்சல் முதல்வர் ஜெய்ராமுக்கு காலிஸ்தான் கொலை மிரட்டல்!

Share it if you like it

காலிஸ்தான் சார்பு சீக்கியர்கள் குழு, இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அமைப்பு அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரத தேசத்திலிருந்து பாகிஸ்தான், பங்களாதேஷ் என இஸ்லாமியர்கள் 2 நாடுகளை பிரித்துக் கொண்டு சென்றதுபோல, நாட்டை பிளவுபடுத்தத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் காலிஸ்தானியர்கள். பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் இந்த காலிஸ்தான் குழு செயல்பட்டு வருகிறது. இவர்கள்தான் மேற்கண்ட மாநிலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மத்திய அரசு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த காலிஸ்தான் சார்பு சீக்கியர்கள் குழுவின் பொது ஆலோசகராக இருப்பவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர்தான், நேற்று செய்தி நிறுவனங்களுக்கு ஒரு இமெயில் அனுப்பி இருக்கிறார். அந்த மெயிலில்தான், “சுதந்திர பஞ்சாபின் தலைநகராக சிம்லா இருக்கும். அங்கு சீக்கியர்கள் காலிஸ்தானி கொடிகளை ஏற்றுவார்கள். ஆகஸ்ட் 15-ம் தேதி இமாச்சல் மக்கள், இந்திய தேசிய கொடியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். இந்த பிரச்னை இந்தியாவிற்கும், சீக்கியர்களுக்கும் இடையேயானது. மோடி அரசாங்கம் வன்முறையை பயன்படுத்துவதில் உறுதியாக இருப்பதால், இந்த மோதலில் இருந்து இமாச்சல் மக்கள் விலகி இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த அமைப்பினர் கடந்த ஜனவரி 26-ம் தேதி, வரைப்படம் ஒன்றை வெளியிட்டார்கள். அதில், வாக்கெடுப்பு மூலம் இந்தியாவில் இருந்து காலிஸ்தான் பிரியவிருப்பதாகவும், காலிஸ்தானின் எதிர்கால தலைநகராக சிம்லா இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்கள். இந்த வரைபடம், 1966-ம் ஆண்டுக்கு முந்தைய பஞ்சாப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். இதில், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it