ராமகிருஷ்ண மடத்தின் அழைப்பை புறக்கணித்த தமிழக முதல்வருக்கு ஹிந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ; தொழு நோயாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பல்வேறு சமூக சேவைகளை ராமகிருஷ்ண மடம் செய்து வருகிறது. அந்த மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியை முதல்வர் புறக்கணித்த து கண்டனத்துக்குரியது.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மடத்தின் சன்னியாசிகள் விழாவுக்கான அழைப்பிதழை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தனர். எல்லா மதத்தை சேர்ந்தவர்களையும் சம மாக நடத்துவேன் என உறுதி மொழி எடுத்த முதல்வரின் இந்த புறக்கணிப்பு ஏற்புடையதல்ல.
ராமகிருஷ்ண மட விழாவை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், அன்னிய மத நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் செல்வாரா என இந்துக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
கிறிஸ்தவ பெந்தேகொஸ்தே மாநாடு, சிஎஸ்ஐ சர்ச் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட முதல்வர் பாரம்பரியமிக்க ராமகிருஷ்ணா மட விழாவை புறக்கணித்த து ஏற்புடையதல்ல. இதேபோல் ரம்ஜான் நோன்பையும் புறக்கணிப்பாரா என்பதை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.