இரண்டு ஆண்டுகளில் 65 சிலைகள் உடைப்பு இந்து முன்னணி கடும் கண்டனம்

இரண்டு ஆண்டுகளில் 65 சிலைகள் உடைப்பு இந்து முன்னணி கடும் கண்டனம்

Share it if you like it

தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் 65 கோவில் சிலைகள் உடைக்கப்பட்டன கைதாகும் குற்றவாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது வினோதமாக உள்ளது தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல மாவட்டங்களில் இந்து கோவில் மர்ம நபர்களால் சிலைகள் உடைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22 விக்கிரகங்கள் மே மாதம் கோவையில் கோனியம்மன் கோவிலில் திருட்டு திருப்பூர் மாவட்ட அவிநாசி கோவிலில் சிலைகள் சேதம் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஆனால் இந்து அறநிலையத்துறை பெயரில் ஆலயங்களில் நிர்வகிக்கிறோம் என்று வருவாயை மட்டுமே குறியாய் கொண்டு இயங்கும் தமிழக அரசு இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.


Share it if you like it