கோவில் நிலத்தில் திருட்டு மண்: லாரியை சிறைப்பிடித்த இந்து முன்னணி!

கோவில் நிலத்தில் திருட்டு மண்: லாரியை சிறைப்பிடித்த இந்து முன்னணி!

Share it if you like it

அனுமதியின்றி கோவில் நிலத்தில் திருட்டு மண் அள்ள முயன்றவர்களை ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து, இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;

சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவுள்ள காலி மைதானத்தில் நேற்று இரவு சுமார் 12 மணிக்கு 5லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரம் எடுத்து வந்து மைதானத்தில் பள்ளம் தோண்டி மண் அள்ளி உள்ளனர். அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்து அனுமதி இல்லாமல் எப்படி மண் அள்ளலாம். உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பினர். கோவிலின் இ ஓ உதவியாளர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் மண் அள்ளுபவர் உடன் நின்று கொண்டிருந்தார் அவரிடம் கேட்கும்பொழுது கோவில் நிர்வாகம் தான் அனுமதி கொடுத்துள்ளது என்று கூறினார்.

அனுமதி இருக்கிறது என்று சொன்னால் அனுமதியை காட்டுங்கள் என்று கேட்ட போது காண்பிக்கவில்லை. ஆகையால், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மண் அள்ளிய லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை வெளியே எடுக்க அனுமதிக்கவில்லை மேலும் காவல்துறைக்கு நேற்று இரவு இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவில் இடத்தில் மண் அல்ல யார் அனுமதி கொடுத்தது யாருடைய உதவியோடு இதுபோன்ற சட்டவிரோத காரியம் நடைபெற்று உள்ளது. இதற்கு, கோவில் இ ஓ துணை போய் உள்ளார் என்று தெரிய வருகிறது. மேலும் யாரெல்லாம் இந்த திருட்டு மண் அள்ளும் வேலைக்கு உதவியாக இருந்த அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Share it if you like it