இந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன் – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா குற்றச்சாட்டு !

இந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் புறக்கணிக்கப்பட்டேன் – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா குற்றச்சாட்டு !

Share it if you like it

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் ராதிகா கேரா, நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கேரா, ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது தனக்கு எப்படி மது வழங்கப்பட்டது என்பது குறித்தும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது, ​​சத்தீஸ்கர் காங்கிரஸின் ஊடகத் தலைவர் – சுஷில் ஆனந்த் சுகா எனக்கு மது வழங்கினார். மேலும் அவர் 5-6 கட்சிக்காரர்களுடன் சேர்ந்து குடிபோதையில் எனது அறையின் கதவைத் தட்டினார். இதனால் நான் மிகவும் பயந்து சச்சின் பைலட் மற்றும் ஜெய்ராமுக்கு தகவல் தெரிவித்தேன். இதனால் அன்று அதிர்ஷ்டவசமாக தப்பினேன் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் இந்து விரோத சித்தாந்தத்தை பின்பற்றாததால் தான் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“30ம் தேதி அன்று மாலை, மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் சுஷில் ஆனந்த் சுக்லாவிடம் பேசச் சென்றபோது, ​​அவர் என்னைத் மிகவும் மோசமாக திட்டினார். அவர்கள் என்னை ஒரு அறையில் உள்ளே அடைத்து மற்ற இரண்டு மாநில செய்தித் தொடர்பாளர்களுடன் சேர்ந்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அச்சமுற்று நான் கத்தினேன் ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. அன்று நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். இதனை அடுத்து நான் காங்கிரஸ் தலைமையிடம் புகார் செய்தேன், ஆனால் யாரும் என் புகார்களுக்கு செவிசாய்க்கவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.

காங்கிரஸின் மீது போட்டியாளர்களால் சுமத்தப்படும் இந்து விரோத குற்றச்சாட்டுகளை தான் ஒருபோதும் நம்பவில்லை என்றும், ஜனவரி 22 அன்று அயோத்தியில் நடந்த பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட பிறகு தான் “உண்மையை அம்பலப்படுத்தினேன்” என்றும் கேரா மேலும் கூறினார்.

“காங்கிரஸ் கட்சியானது ராமர், சனாதன எதிர்ப்பு, இந்து விரோதம் என்று எப்பொழுதும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நான் நம்பவே இல்லை. இப்போதுதான் காங்கிரசின் உண்மை முகத்தினை பார்த்தேன். நான் என் பாட்டியுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பிய பிறகு, என் வீட்டு வாசலில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற வாசகத்துடன் காவி கொடியை வைத்தேன், இந்த நிகழ்வை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டேன். இதனால் கட்சி நிர்வாகிகள் என்மேல் மிகவும் கோவத்தை கொட்டி தீர்த்தனர். நீ எதற்காக கோவிலுக்கு சென்றாய் என கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

“ராம் லல்லா பிறந்த ஸ்ரீ அயோத்தி நம் அனைவருக்கும் மிகவும் புனிதமான இடம், அங்கு செல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆனால் அங்கு செல்வதற்கு இவ்வளவு எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று நான் என் வாழ்நாளில் நினைத்ததில்லை. .”

“என் வாழ்நாளில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கட்சியில் தீவிரமாக பணியாற்றி உள்ளேன். இந்திய தேசிய மாணவர் சங்கம் முதல் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வரை முழு நேர்மையுடன் பணியாற்றினேன். இருந்தபோதிலும், நான் அயோத்தியில் ராமரை தரிசித்ததால் இவ்வளவு கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது,” என்று அவர் கூறினார்.


Share it if you like it