Share it if you like it
என் குடும்பத்தில், இருந்து மகனோ, மருமகனோ, யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்று தமிழக தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின். தமிழக மக்களிடம் செய்த சத்தியத்தை இன்று வரை தி.மு.க தலைவர் எப்படி காத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தி.மு.க எம்.பி கனிமொழி., என் மகனும் அரசியலுக்கு வரமாட்டார் என்று அண்மையில் வாக்குறுதி அளித்து தமிழக மக்களை முட்டாள் என்று நினைத்தற்கு பலரும் வாழ்த்தி வரும் நிலையில்.
வாரிசு என என்னை நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும்; எம்.எல்.ஏ பதவி என்பது நியமனப் பதவி கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி என்று உதயநிதி குறிப்பிட்டு உள்ளார்.
- சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட வேறு வேட்பாளர்களே கிடையாதா?
- எந்த அடிப்படையில் இளைஞர் அணி செயலாளர் பதவி மற்றும் வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்பட்டிர்கள்?
- வேட்பாளர் நேர்காணலில் நீ போய் சேப்பாக்கம் தொகுதியில் மற்ற வேலையை பாரு என்று பாலு மாமா தன்னிடம் கூறியதாக நீங்கள் ஏன்? கூற வேண்டும்.
- ஸ்டாலின் வாரிசு என்னும் அடிப்படையில் தானே டி.ஆர். பாலு அவ்வாறு கூறியதாக தமிழக மக்கள் எடுத்து கொள்ள முடியும்?
- உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க தலைவர் கூறியவுடன். தலைவர் கருத்திற்கு மதிப்பளித்து நேற்று வந்த எனக்கு சீட்டா என்று வேறு ஒரு வேட்பாளரை நீங்கள் ஏன்? பரிந்துரை செய்யவில்லை.
- எந்த சுற்று அடிப்படையில் உங்களுக்கு சீட் வழங்கப்பட்டது.
- ஸ்டாலின் மகன், கலைஞர் பேரன், இதன் அடிப்படையில் தான் சீட் வழங்கப்பட்டு உள்ளது. என்பது அனைவரின் பார்வையாக உள்ள நிலையில்., வாரிசு என்று நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
- என் குடும்பம் அரசியல் குடும்பம் என்பதால் நானும் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று முன்பு கூறியது தங்களுக்கு நினைவு இருக்கிறதா உதயநிதி? என்று நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.
வாரிசு அரசியல் என்று கருதினால் மக்கள் என்னை உதயநிதி மக்களிடம் திடீர் வேண்டுகோள்..!
Share it if you like it