பள்ளி நிர்வாகத்தின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்..! ஆனால் அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும், இருப்பது கேவலம் – பிரபல சினிமா இயக்குனர் பாய்ச்சல்..!

பள்ளி நிர்வாகத்தின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்..! ஆனால் அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும், இருப்பது கேவலம் – பிரபல சினிமா இயக்குனர் பாய்ச்சல்..!

Share it if you like it

கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பின் போது கீழ்த்தரமாக நடந்து கொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம், போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது.

இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள் தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டு விட்டனர்.

சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின் குரல், தந்தையின் குரல், அண்ணனின் குரல், இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல், இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.

இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவு தாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது தான் பெண்ணின் மானம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Share it if you like it