படிக்கட்டும், பார்கிங் ஏரியாவும்தான் அரசுப் பள்ளியின் வகுப்பறைகளாக செயல்பட்டு வரும் அவலநிலை நிலவுகிறது. இதையறிந்து, இதுதான் திராவிட மாடல் அரசின் 2 அண்டு சாதனை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 34 ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், 840 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். முதலில் உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, கடந்த 2018-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தரம் உயர்த்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும்கூட, கூடுதல் வகுப்புகளுக்கு அரசுத் தரப்பில் வகுப்பறை கட்டடம் கட்டித் தரவில்லை. இதனால், மாணவிகள் அமர்ந்து படிக்க இடவசதி இல்லாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஆசிரியைகள் மரத்தடி, வராண்டா, பார்கிங் ஏரியா, படிக்கட்டுகள் மற்றும் திறந்த வெளியை பாடசாலையாக பயன்படுத்தி, மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வெயில் நேரங்களில் ஆசிரியைகளும், மாணவிகளும் சிரமத்திற்குள்ளாக, மழை நேரங்களில் வகுப்புகள் நடத்தப்படுவதே இல்லையாம். இதனால், மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டும் பெற்றோர்கள், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.