இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து சர்வதேச நாணயம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகளைச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது ; உலகின் வளர்ந்து வரும் பெரும் பொருளாதார நாடுகளில் 2023, 2024 – ஆம் ஆண்டுகளில் வேகமாக வளரும் நாடாக இந்தியாவே இருக்கும். 2023-ல் 6.1 சதவீதமாகவும், 2024-ல் 6.8 சதவீதமாகவும் இந்திய பொருளாதாரம் வளரும் என ஐ.எம்.எப். கணித்துள்ளது.