பாதி தமிழ்த்தாய் வாழ்த்து… கழிவுநீர் குழாயில் தேசியக்கொடி: மேலப்பாளையத்தில் அவமதிப்பு!

பாதி தமிழ்த்தாய் வாழ்த்து… கழிவுநீர் குழாயில் தேசியக்கொடி: மேலப்பாளையத்தில் அவமதிப்பு!

Share it if you like it

திருநெல்வேலியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு, கழிவுநீர் குழாயில் தேசியக்கொடியை கட்டி அவமதித்து, அதுவும் ஏற்றும்போது அறுந்து விழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கஜானத்துல் உலூம் பள்ளி அமைந்திருக்கிறது. இப்பள்ளியில் கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியைகள் பலரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை கொடுக்காமல், ஆடி அசைந்து கொண்டும், செல்போனை நோண்டிக் கொண்டும், வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர். இதாவது பரவாயில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு, தேசியக்கொடி ஏற்றும் படலத்தை தொடங்கி விட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் முகம் சுளித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மக்களுக்கு அடுத்த ஷாக் காத்திருந்தது. அதாவது, வழக்கமாக எல்லா பள்ளிகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு தனியாக கொடிக்கம்பம் இருக்கும். ஆனால், இப்பகுதியில் கொடிக்கம்பம் இல்லைபோல் தெரிகிறது. எனினும், தற்காலிகமாக ஒரு மரக்கம்பத்தை ஊன்றி தேசியக்கொடியை ஏற்றி இருக்கலாம். ஆனால், பள்ளியின் மாடிப் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாயில் தேசியக்கொடியை கட்டி, சிறப்பு விருந்தினரை ஏற்றச் சொன்னார்கள். அவரும், வேண்டா வெறுப்பாக தேசியக்கொடியே ஏற்றினார். ஆனால், அந்தக் கொடியைக் கூட ஆசிரியர்கள் உருப்படியாகக் கட்டவில்லை.

சிறப்பு அழைப்பாளர் ஏற்றிக் கொண்டிருக்கும்போதே அக்கொடி அறுந்தி விழுந்தது. இதைப் பார்த்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சி. பள்ளிக் குழந்தைகளோ, டேய் தேசியக்கொடியை அறுத்துட்டாங்கடா என்று சொல்ல, மாணவர்களுக்கும் அதிர்ச்சி. ஆனால், அப்பள்ளியின் ஆசிரியர்களோ, சிறப்பு அழைப்பாளரோ இதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. மீண்டும் அதே கழிவுநீர் குழாயில் தேசியக்கொடியை ஏற்றி இருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பொதுமக்கள், தேசநல விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசியக்கொடியையும் இதைவிட யாரும் அசிங்கப்படுத்தவும், அவமானப்படுத்தவும் முடியாது. ஆகவே, சம்மந்தப்பட்ட மேலப்பாளையம் கஜானத்துல் உலூம் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it