காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சீன ஆதரவு பெற்ற ஊடகங்கள், பாரதப் பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்தையும், மிக கடுமையாக விமர்சனம் செய்யும் விதமாக கார்ட்டூன் வரைவது, கட்டுரை எழுதுவது என இன்று வரை தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், போலி அரசியல்வாதிகளின், முகத்திரையை கிழிக்கும், விதமாக பல்வேறு கார்ட்டூன்களை வரைந்தவர் பிரபல ஒவியர் வர்மா. இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள். அவரின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக. பல்வேறு விதங்களில் அவருக்கு தொல்லை கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
தமிழக வரைப்படத்தை ஸ்டாலின், மிதிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட கார்ட்டூன் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக. இந்த கார்ட்டூன் அமைந்து உள்ளதாக பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தேசிய சிந்தனை கொண்ட கார்ட்டூனிஸ்ட், மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை. தமிழக வரைப்படத்தை அவமதித்த, கார்ட்டூனிஸ்ட் மீது எப்பொழுது நடவடிக்கை? எடுக்கும் என்று மக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக வரைபடம் மேல் திராவிட தலைவர் ஷூ கால்களுடன்🙏🖤♥️ ஆர்வக்கோளாறு கிராபிக்ஸ் டிசைனர்களே நம் அனைவரையும் விட தமிழகம் மேலானது திராவிட இன பாசத்தை எங்கள் தாய் தமிழ்நாடு வரைபடத்தின் மீது காட்டாதீர்.. அன்பை ஆரோக்கியமாக வெளிப்படுத்துங்கள் இப்படி ஒன்றை தாழ்த்தி மற்றதை உயர்த்தியல்ல🙏🖤♥️ pic.twitter.com/1Uo2mNjr9o
— Madan Ravichandran (@MadanRavichand4) May 9, 2021
தேசிய கொடியை அவமதித்த ஸ்டாலின்@mkstalin @Udhaystalin @arivalayam pic.twitter.com/1avqRtHk1t
— கோகுல் गोकुल 🇮🇳 (@gokul_03_07) August 17, 2020