Share it if you like it
புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.. தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலால் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. இதனால் புதுவையில் ஆட்சி அமைக்கும் பலத்தை காங்., இழந்தது.. இதனை அடுத்து ஆளுநர் பெரும்பான்மையை நிருபிக்க பிப்-22 ஆம் தேதி புதுவை முதல்வருக்கு கெடு விதித்து இருந்தார்..
புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் நாராயணசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கோரி இருந்தார். இதில் பெரும்பான்மை காங்கிரஸ் அரசுக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறியதை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.
இதன் எதிரொலி நிச்சயம் தமிழகத்திலும் தொடரும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
Share it if you like it