15 வகை அரிய கனிமங்கள்; இந்தியாவிற்கு கிடைத்த ஜாக்பாட்!

15 வகை அரிய கனிமங்கள்; இந்தியாவிற்கு கிடைத்த ஜாக்பாட்!

Share it if you like it

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் 15வகை அரியனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தை மையமாக கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் 15 வகை அரிய கனிமங்களை கண்டுப்பிடித்துள்ளன. இந்த ஆய்வில், லாந்தனம், சீரியம், பிரசியோடைமியம், நியோடைமியம், ஹ்ஃப்னியம், டாண்டலம், நியோபியம், சிர்கோனியம், ஸ்காண்டியம் உள்ளிட்ட அரியவகை உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் மருத்துவ தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் இந்த வகை கனிமங்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it