6 மாநிலங்களில் வசிக்க பொதுமக்களுக்கு தடை!

6 மாநிலங்களில் வசிக்க பொதுமக்களுக்கு தடை!

Share it if you like it

நம் நாட்டில் 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 10 இடங்களில் பொதுமக்கள் வசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளால் நாளுக்கு நாள் நமக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் வழியாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட நமது வட கிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. தவிர, உளவு கப்பல், உளவு பலுான் ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு வேண்டாத நாடுகளை சீனா உளவு பார்த்து வருகிறது. ஆகவே, உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அதிரடி முடிவை நேற்று அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீஹார், கேரளா ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் உள்ள குறிப்பிட்ட 10 இடங்கள் பொதுமக்கள் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது, பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள், நமது எதிரி நாடுகளுக்கு சாதகமாக இருக்கும் என்று உளவு அமைப்புகள் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அங்கீகரிக்கப்படாத நபர்கள் இந்த பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அலுவலக ரகசிய சட்டம் 1923-ல் அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட 10 இடங்களும் பொதுமக்கள் வரம்பிற்கு அப்பாற்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதியாக தற்போது முதல் அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட அந்த 10 இடங்கள் எவை என்கிற விபரம் தெரிவிக்கப்படவில்லை. 1923-ம் ஆண்டின் அலுவலக ரகசிய சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தை யாரும் அணுகவோ, ஆய்வு செய்யவோ, கடந்து செல்லவோ பயன்படுத்த முடியாது. காரணம், இப்பகுதியை பயன்படுத்துவது எதிரி நாட்டுக்கு உதவுவதாகக் கருதப்படும். இச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.


Share it if you like it