சீனாவை விட இந்தியா இரு மடங்கு வளர்ச்சியடையும்!

சீனாவை விட இந்தியா இரு மடங்கு வளர்ச்சியடையும்!

Share it if you like it

நடப்பாண்டில் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து உலக பொருளாதார பார்வை குறித்த பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடப்புாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் 8.2 சதவீதமாக இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும். சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தைவிட, இரு மடங்கு வேகமானதாக இருக்கும். நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும். இது 2021-ல் 6.1 சதவீதமாக இருந்தது. இந்தியாவை பொறுத்தவரை, 2021-ல் 8.9 சதவீதம் வளர்ச்சி இருந்தது. இது 2023-ல் 6.9 சதவீதமாக இருக்கும்.

நடப்பாண்டை பொறுத்தவரை, இதற்கு முந்தைய கணிப்பிலிருந்து 0.8 சதவீதம் குறைத்தே 8.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனில் நடக்கும் போரின் பிரதிபலிப்பு காரணமாக, அடுத்தாண்டில் இந்தியாவின் வளர்ச்சி குறைத்து கணிக்கப்பட்டிருக்கிறது. போர் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலையில் பாதிப்பு ஏற்பட்டு, வளர்ச்சியை பாதிக்கும். சீனாவின் கடந்தாண்டு வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டின் வளர்ச்சி 4.4 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு 5.1 சதவீதமாக இருக்கும். நடப்பாண்டில் சீனாவின் வளர்ச்சியானது இந்தியாவின் வளர்ச்சியில் பாதியாகவே இருக்கும்.

சீனாவில் அடிக்கடி கொரோனாவுக்காக அமல்படுத்தப்படும் தடைகள், அதன் வளர்ச்சியை பாதிப்பதாக இருக்கிறது. உலக அளவில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைக் காணும். கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் மீட்சி காணத் துவங்கிய நிலையில், போரால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.


Share it if you like it