Share it if you like it
பாரத நாட்டிற்கு எதிரான படுகொலை மற்றும் தீவிரவாத செயல்களில் தேடுப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சுர்ரே நகரில் கொல்லப்பட்டார். அவரை கனடா குடிமகன் என கூறிய அந்நாட்டு பிரதமர் ட்ரூடோ அவரது படுகொலைக்கும் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறியிருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தருந்த நிலையில் இந்தியா தூரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியிருந்தது. இதற்கு பதிலடி கொடும் விதாமாக இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேவை வெளியேறும்படி மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, 5 நாட்களுக்குள் அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share it if you like it