கிறிஸ்தவ தேசியவாதிகள் என்று சொல்வார்களா? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!

கிறிஸ்தவ தேசியவாதிகள் என்று சொல்வார்களா? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி!

Share it if you like it

இந்தியாவை குறிப்பிட ஹிந்து தேசியவாதிகள் என்று சொல்லும் வெளிநாட்டு ஊடகங்கள், அமெரிக்கா, ஐரோப்பாகாரர்களை கிறிஸ்தவ தேசியவாதிகள் என்று குறிப்பிடுவார்களா என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி காட்டி இருக்கிறார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எப்போதும் எதிலும் அதிரடி காட்டக் கூடியவர். அதேபோல, வெளியுறவுக் கொள்கையில் எவ்வித சமரசமும் இல்லாமல் நாட்டின் நலனையும், நாட்டு மக்களின் நலனையும் வைத்து மட்டுமே செயல்படுபவர். இதற்கு உதாரணமாக, உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று பெரியண்ணனான அமெரிக்கா உத்தரவிட்டது. அதன்படி, இதர நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டன. ஆனால், இந்தியா மட்டும் துணிச்சலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கியது.

இதுகுறித்து வெளிநாட்டு செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களுடைய வெளியுறவுக் கொள்கை வெளிப்படையானது. நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டது. எங்களுக்கு யார் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் தருகிறார்களோ, அவர்களிடம் வாங்குவோம். இதில் யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது என்று தில்லாக கூறினார். இந்த வீடியோ பயங்கரமாக வைரலான நிலையில், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கான், அந்நாட்டில் போட்டுக்காட்டி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, பல்வேறு விஷயங்களிலும் அதிரடியாக பேசக் கூடியவர் ஜெய்சங்கர்.

இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம், பாரத பிரதமர் மோடி குறித்து ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குத்தான், இந்தியாவை குறிப்பிட ஹிந்து தேசியவாதம் என்று சொல்லும் வெளிநாட்டு ஊடகங்கள், அமெரிக்கா, ஐரோப்பாவை குறிப்பிட கிறிஸ்தவ தேசியவாதம் என்று கூறுவார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய “The India Way: Strategies for an Uncertain World” என்ற ஆங்கில புத்தகம் மராத்தி மொழியில் ‘பாரத் மார்க்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பட்டது.

இதன் அறிமுக விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது. இப்புத்தகத்தின் மராத்தி பதிப்பை மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, பி.பி.சி.யின் ஆவணப்படம் குறித்து, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “கடந்த 9 வருடங்களை பார்த்தால், அரசாங்கமும் அரசியலும் தேசியவாதமாகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதில், மன்னிப்புக் கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். அதே தேசியவாதிகள், வெளிநாடுகளுக்கும் உதவி செய்திருக்கிறார்கள். மற்ற நாடுகளில் பேரழிவு சூழ்நிலைகளில் முதல் ஆளாக இதே தேசியவாதிகள்தான் உடன் நின்றனர்.

வெளிநாட்டு செய்தித்தாள்களில், இந்தியாவை குறிப்பிட ‘ஹிந்து தேசியவாத கருத்து’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்த விரும்புகிறார்கள். நம்மை ஹிந்து தேசியவாதிகள் என்று குறிப்பிடும் அவர்கள், அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ கிறிஸ்துவ தேசியவாதிகள் என்று சொல்லமாட்டார்கள். இந்த சொற்கள் நமக்கு என்றே ஒதுக்கப்பட்டவை. இந்தியா உலகத்துடன் இணைந்திருக்க அதிகம் தயாராகி வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனை புரிந்தகொள்ளாத அவர்கள், இந்தியாவை எவ்வளவு தவறாக படிக்கிறார்கள் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.


Share it if you like it