நேபாள் பப்பில் சீன தூதருடன் ராகுல்: அண்ணாமலை விளாசல்!

நேபாள் பப்பில் சீன தூதருடன் ராகுல்: அண்ணாமலை விளாசல்!

Share it if you like it

கேரளாவுக்குச் சென்றிருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வயநாடு தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தியை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் தலைவராக பதவியேற்றதிலிருந்தே காங்கிரஸ் கட்சி படு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இவரது செயல்பாடுகள் குழந்தைத்தனமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருக்கும். எனவே, இவருக்கு பப்பு என்று செல்லப்பெயர் வைத்து விட்டார்கள் நெட்டிசன்கள். நாடாளுமன்றத்தில் மோடியைப் பார்த்து இவர் கண்ணடித்த நிகழ்வு கேலி, கிண்டலுக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. இன்னொருமுறை இவர் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு எம்.பி.யை பற்றி கடுமையான விமர்சனம் செய்தார். இதற்கு அந்த எம்.பி. எதிர்ப்புத் தெரிவித்து எழுந்து பேச முற்படவே, அவரை அமரும்படி கூறினார் சபாநாயகர். அப்போது இடைமறித்த ராகும், அவர் பேச தான் அனுமதி அளிப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சபாநாயகர், அந்த அதிகாரம் உங்களிடம் இல்லை, என்னிடம்தான் இருக்கும் என்று கூறி மூக்குடைத்தார். இப்படி நாடாளுமன்றத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்து கொண்டே இருப்பார்.

இது இப்படி இருக்க, அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதில் ராகுலுக்கு அலாதி பிரியம். தேர்தல் பிரசார நேரத்தில்கூட ஜாலியாக வெளிநாடு சுற்றுலா சென்று வருவார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நேபாள நாட்டிற்கு சென்றிருந்தார் ராகுல். அதாவது, சி.என்.என். தொலைக்காட்சியின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருபவர் சும்னிமா உதாஸ். இவர், நேபாளத்தைச் சேர்ந்தவர். இவரும் ராகுல் காந்தியும் நண்பர்கள். இவரது திருமணம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக மே 2-ம் தேதி காத்மாண்டு சென்றார் ராகுல். அங்கு காத்மாண்டின் புகழ்பெற்ற எல்.ஓ.டி. என்கிற மதுபான விடுதியில் இரவு விருந்து நடந்திருக்கிறது. இதில்தான் ராகுல் காந்தி பங்கேற்றிருக்கிறார்.

இதுதொடர்பான 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. ஒரு வீடியோவில் மது அருந்தும் பெண்ணுக்கு அருகில் ராகுல் இருக்கிறார். அந்தப் பெண் நேபாளத்துக்கான சீன தூதர் ஹோ யாங்கி என்பதுதான் விவகாரமே. மற்றொரு வீடியோவில் ராகுல் தனது செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான சீனா, இந்திய எல்லையில் அத்துமீறி வருகிறது. லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து நமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில், நமது நாட்டின் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். அப்படிப்பட்ட நிலையில், சீன தூதருடன் ராகுல் நெருக்கமாக இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பா.ஜ.க.வினர் ராகுலை வறுத்தெடுத்தனர்.

இந்த நிலையில்தான், கேரள மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் சுரேந்திரன் இல்ல திருமண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பல முக்கிய வி.வி.ஐ.பி.க்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசியபோதுதான் ராகுலை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அண்ணாமலை. நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் ராகுல் காந்தி, இந்தியாவில் எந்த பாருக்குச் சென்றாலும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று கருதி, நேபாளில் இருக்கக் கூடிய பாருக்குச் சென்றிருக்கிறார். எதற்காக சென்று என்று கேள்வி எழுந்தபோது, திருமணத்துக்கு சென்றதாக கூறுகிறார். திருமணத்துக்குச் செல்பவர் திருமண மண்டபத்துக்கு அல்லவா செல்ல வேண்டும்? எதற்காக பாருக்குச் செல்ல வேண்டும்? நாங்களும்தான் இன்று திருமணத்துக்கு வந்திருக்கிறோம். ஆனால், நாங்கள் யாரும் பாருக்குச் செல்லவில்லை. பார்ட்டி செய்யவில்லை!

இது ஒருபுறம் இருக்கட்டும். பாரில் ராகுல் காந்தியின் அருகில் இருப்பது யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அவருடைய நண்பியா, தெரிந்தவரா? என்பதுதான் கேள்வி. இந்த சூழலில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ரேவன் தம்பி, செய்தியாளர்களை அழைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் யாருடனும் பார்ட்டி பண்ணவில்லை. சீன தூதருடன்தான் பார்ட்டி பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். ஒருபுறம் சீனாவின் தூண்டுதலால் நேபாளில் இருக்கக்கூடிய இந்திய நிலத்தை தங்களுக்குத் தரவேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்து, நேபாளை இந்தியாவுடன் வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது நாங்கள்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேபாள் நாட்டிலுள்ள பாரில் சீன தூதருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம். ஆகவே, ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்காமல் இந்தியாவுக்குள் வந்ததே தவறு” என்று வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it