சமீப காலமாக பாரதத்தின் ஆட்சியாளர்களை நோக்கி பாகிஸ்தான் – பங்களாதேஷுடன் மோதல் போக்கு வேண்டாம். விரோதம் வேண்டாம் அவர்களும் நம் சகோதர உறவுகள். தொப்புள் கொடி உறவுகள். நம் தேசத்தில் இருந்து பிரிந்து போன சகோதர தேசம் . அதனால் அவர்களுடன் நல்லெண்ணம் – நல்லுறவு வேண்டும் . யுத்தம் பகை கூடாது என்ற அறிவுரைகளும் வியாக்கியானங்களும் நீண்ட வண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் பாரதம் ஒரு பக்கம் தன்னை தற்காத்துக் கொண்டு மறுபக்கம் எதிரிகளை கத்தின்றி ரத்தன்றி வீழ்த்தும் சாதுரியத்திற்கு வந்த நாள் முதல் பாரதத்தை நோக்கி வைக்கும் இந்த அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் பாரதம் இந்த இரண்டு தேசங்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மத பயங்கரவாதம் காரணமாக இன்னல்களை அனுபவித்து உயிர் வலியை கடந்து வந்த போது அந்தந்த நாடுகளுக்கு எதிராக அவர்களை தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு வார்த்தை கூட பேசாத கள்ள மௌனிகள் என்பதே உண்மை.
பாரதத்தின் நிலப்பரப்பிலிருந்து பிரிந்து போனது தான் பாகிஸ்தானும் பங்களாதேஷும் யாரும் மறுக்கவில்லை . அந்த வகையில் அவர்கள் பாரதத்தின் சகோதர தேசங்களே. யாரும் மறக்கவில்லை.ஆனால் பிரிந்து போன நாள் முதலாய் பாரதத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும் விதமான சச்சரவுகளை தொடர் எதிர்ப்புகளை எல்லைக்கு உள்ளும் புறமும் மதம் சார்ந்த இடையூறுகளை ஏற்படுத்தியது யார்?. மதத்தின் பெயரால் தேசத்தை துண்டாடி சொந்த மண்ணில் மக்களை மதத்தின் பெயரால் கூறு போட்டவர்கள் யார்?. இன்று வரை ஆக்கிரமிக்கும் மனோநிலையில் இன்று வரை இங்குள்ள பெரும்பான்மை மக்கள் பாதுகாப்பு முகமைகள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது விரோதம் பாராட்டுவது யார் ? .
ஒருபுறம் எல்லையில் தினந்தோறும் பாரதத்தின் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு . ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் உள்நாட்டு பயங்கரவாதிகள். அவர்களுக்கு நிதியும் சித்தாந்த பயிற்சியும் நேரடியான ஆதரவும் கொடுக்கும் பாகிஸ்தான் நாடு. அதே பாகிஸ்தான் ராணுவம் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இரண்டும் இணைந்து பாரதத்தின் உள்ளும் புறமும் கட்டவிழ்த்து விட்ட தீவிரவாத நடவடிக்கைகள் அதன் காரணமாக எந்நேரம் அச்சுறுத்தலில் இருந்த பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பு.
மறுபுறம் தன் சொந்த தேசத்தில் இருந்தே தனக்கான விடுதலையை வென்று கொடுத்த தாய்வீடு பாரதம் என்ற நன்றியை மறந்து வங்கதேசம் அதன் குடிமக்கள் எல்லைக்கு உள்ளும் புறமும் பாரதத்தின் நலனுக்கு எதிராக செய்த அத்தனை மத பயங்கரவாதத்திற்கும் வங்கதேச ஆட்சியாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்றார்கள். குடியுரிமை திருத்த சட்டம் – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் போராட்டம் – கலவரங்களில் ஈடுபடும் சட்டவிரோத குடியேறிகளான வங்கதேச குடிமக்களுக்கு எதிராக பாரதத்தின் குடிமக்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதன் பிரதிபலிப்பு வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் மீது பெரும் வன்மமாக வெளிப்படும் என்று நாகரிகமான எச்சரிக்கையை மிரட்டலாக விடுத்தவர்தான் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா.
கடந்த காலங்களில் சர்வதேச சட்டம் யுத்த நியதிகளை மீறி ரவீந்தர் கவுசிக்கை கொன்று குவித்தவர்கள். சரப்ஜித் சிங்கை உயிரோடு உறுப்புகளை வெட்டி எடுத்து கொன்றவர்கள். அந்த காலங்களைப் போல் பாரதத்தில் காங்கிரசின் ஆட்சி காலம் இருந்திருந்தால் அபிநந்தனை பிடித்த இடத்திலேயே உயிரோடு எரித்து சாம்பலாக்கி இருப்போம் . ஆனால் பாகிஸ்தானின் துரதிருஷ்டம் பாரதத்தின் அதிர்ஷ்டம் பாரதத்தில் மோடி ஆட்சி இருந்தது . அதன் காரணமாகவே வேறு வழியின்றி அபிநந்தனை உயிரோடு ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என்று முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரின் பதவி காலத்திலேயே வெளிப்படையாக பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இதுவரையில் பாரதம் – பாகிஸ்தான் இடையே நடந்த போர்கள் எல்லாம் ஒன்று காஷ்மீரை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் வலிய வந்து தொடுத்த ஆக்கிரமிப்பு போராக இருக்கும். இல்லையேல் பாரத எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டும் தற்காப்பு யுத்தமாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வலிய போய் முன்னெடுத்த ஒரே யுத்தம் வங்கதேச விடுதலைப் போர் மட்டுமே. அந்த யுத்தமும் அகதிகளின் வருகையால் பாரதம் எதிர்கொண்ட அன்றாட சிக்கலுக்கு எந்த தீர்வையும் முன்வைக்காத பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது கொண்ட கோபம் காரணமாகவும் தனது தேசத்தை தற்காத்துக் கொள்ள வேண்டும் எனில் வங்கதேசத்தை ஒரு தனி நாடாக அறிவித்தால் மட்டுமே அவர்களின் உள்நாட்டு குழப்பம் தங்களது தேசத்தை பாதிக்காத வண்ணம் நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற ஒற்றை காரணம் கொண்டே அப்போதைய இந்திய ஆட்சியாளர்கள் வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானிடம் வலிய போர் நடத்தினார்கள்.
ஆனால் தனது நிலப் பகுதியை பிரித்து தனி நாடு என்ற அந்தஸ்தோடு கொடுத்த ஒரு தேசம் பாரதம். இன்று வரையில் அவர்களது தேசம் அவர்களது இறையாண்மையை மதித்து சர்வதேச அரங்கில் அவர்களுக்கான ஒரு தனி நாடு என்ற அங்கீகாரத்தை மதித்து கௌரவமாக நடத்தும் ஒரு கண்ணியமான நாடு பாரதம். ஆனால் இதற்கு பிரதிபலனாக பாகிஸ்தான் – பங்களாதேஷ் என்ற இரண்டு நாடுகளும் பாரதத்திற்கு இன்று வரை செய்து வரும் கைமாறு எல்லைக்கு உள்ளும் புறமும் மத ரீதியான பயங்கரவாதிகளை உரம் போட்டு வளர்ப்பது. அதற்கு எல்லா வகையிலும் பாரதத்தில் இருக்கும் உள்நாட்டு துரோகிகளை தங்களின் கூட்டாளிகளாக மாற்றி வைத்து இங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதும் மட்டுமே.
பாரதத்தின் மீது பகை கொண்டு பாகிஸ்தான் பங்களாதேஷில் இருந்த சிறுபான்மை மக்களை கொன்று குவிப்பது. இன்றுவரையில் அவர்களை பினைய கைதிகளை போல நடத்துவதுமான பாகிஸ்தான் – பங்களாதேஷின் மனித குல விரோத நடவடிக்கைகளை பற்றி இன்றுவரை பேசுவதற்கு ஆள் இல்லை. எல்லைக்கு உள்ளும் புறமும் கொடுக்கும் அவர்களின் குடைச்சல்களைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. சர்வதேச அரங்கில் பாரதத்தின் வளர்ச்சியை விரும்பாத அத்தனை நாடுகளின் இரண்டாம் கட்ட – மூன்றாம் கட்ட அடியாள்களாக செயல் படும் பாகிஸ்தான் வங்கதேச இராணுவம் உளவுத்துறை பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் துணிவில்லை. பாரத விரோத உளவாளிகளாக இன்று வரை செயல்பட்டு வரும் பாகிஸ்தான் – பங்களாதேஷ் ராஜிய நிலைப்பாடுகளை பற்றியோ இங்கு யாருக்கும் கவலை இல்லை .அதைப் பற்றி கேள்வி எழுப்ப யாருக்கும் துணிவில்லை.
ஆனால் பாரதத்தின் ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சிட்டு அதன் மூலம் வயிறு வளர்க்கும் அண்டை நாடுகளுக்கு நிரந்தர பாடம் புகட்ட பண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் அதை செய்த மோடி பாகிஸ்தான் பங்களாதேஷுக்கு விரோதி. உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தீவிரவாத நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து கட்டுப்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் அந்த உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் அமித்ஷா ஒரு பாசிச பயங்கரவாதி. தேசத்திற்கு உள்ளும் புறமும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாகிஸ்தான் நாட்டிலேயே பாரதத்தின் பாதுகாப்பிற்கென்று உளவாளிகளை கட்டமைத்து அதன் மூலம் பாரதத்தின் பாதுகாப்பை உறுதி செய்தால் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் அஜித் அவர்கள் ஐபிஎஸ் ஒரு பாசிச கைக்கூலி. அவரின் சிஷ்யனாக வளர்ந்து இன்று தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தேசவிரோத பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பினருக்கும் சவால் விடும் வகையில் மாநிலத்தின் பாதுகாப்பையும் அதன் மூலம் பாரதத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் ரவி ஐபிஎஸ் – அண்ணாமலை ஐபிஎஸ் என்று எவராகினும் அவர்கள் ஆரிய கைக்கூலிகள்.
தனது தேசத்தின் நலன் வளர்ச்சி பாதுகாப்பு ஒன்றை குறிக்கோள். அதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை எல்லா மட்டத்திலும் நாட்டிற்கு உள்ளும் வெளியேயும் எல்லா வகையிலும் முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த உயர் பதவிகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தான் விரோதிகள் பங்களாதேஷ் விரோதிகள். அண்டை நாட்டுடன் யுத்தம் பாராட்டும் சண்டைக்காரர்கள். ஆனால் இவ்வளவு பிரயத்தனம் செய்து தேசத்தை பாதுகாக்க இவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டே இந்தன் தேசத்தின் பாதுகாப்பிற்கு விளைவிப்பதை ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட நாடுகளுக்கு ஆதரவாக இன்றும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அறிவுரை சொல்வார்கள் எனில் இவர்கள் யார் ? இவர்களுடைய பிறப்பு இவர்களுடைய தேசிய சார்பு என்ன ?
இங்கேயே பிறந்து வளர்ந்து பாரதத்தின் குடியுரிமையோடு வாழ்ந்து கொண்டு பாகிஸ்தான் – பங்களாதேஷ் மற்றும் உலகளாவிய பாரத விரோத சக்திகள் அனைத்திற்கும் பொது உளவாளிகளாக வலம் வரும் உள் நாட்டு துரோகிகளை பற்றி பேச விமர்சனம் செய்ய நாதியில்லை.மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அவர்கள் சர்வாதிகாரிகள் என்றால் பாரதத்தின் மண்ணும் மக்களும் பாதுகாப்பு பெற அந்த சர்வாதிகாரிகள் பாரதத்திற்கு எப்போதும் தேவை தானே? அதை தானே இங்குள்ள ஒவ்வொரு உணர்வுள்ள பாரதீயனும் விரும்புவான்.
இதுவரையில் உலகின் எந்த தேசத்தையும் ஆக்கிரமிக்காத பாரதம் எந்த நாட்டிலும் ஊடுருவி ஆக்கிரமிக்க முயலாத பாரதத்தின் இராணுவம் மீது ஆக்கிரமிப்பாளர்கள் என்று அவதூறு பற்றி பேச இவர்களுக்கு அருகதையில்லை .இதை சொல்பவர்கள் நிச்சயம் தேசத்துரோகிகளாகத்தான் இருக்க முடியும் என்பது இங்குள்ள ஒவ்வொரு பாரதீயனின் அனுபவ பாடம் . பாரதத்தின் கடந்த கால இழப்புகளும் கடந்து வந்த இன்னல்களும் சொல்லும் கசப்பான உண்மை. அப்படி என்றால் இங்குள்ள உணர்வுள்ள பாரதீயன் காவியாகவே இருக்கட்டும். இந்த பாரதத்தின் தற்காப்பு தற்சார்பு நிலை நிறுத்தி சர்வதேச அளவில் உலகின் குருவாக பாரதத்தை வளர்த்தெடுக்கும் ஆட்சியாளர்கள் அண்டை நாட்டு விரோதிகளாக சர்வாதிகாரிகளாகவே இருக்கட்டும். இந்த சர்வாதிகாரிகள் சண்டைகாரர்களால் மட்டுமே பாரதம் நலமும் பாதுகாப்பும் பெறமுடியும்.