பாரதத்தோடு  இணைவோம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்

பாரதத்தோடு இணைவோம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்

Share it if you like it

சுதந்திரத்தின் போது பாரதம் துண்டாடப்பட்டு கிழக்கு மேற்கு பாகிஸ்தான் நாடுகள் உருவானது. இஸ்லாமிய நாடுகளாக உருவான தற்போதைய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காஷ்மீர் பஞ்சாப் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பாரதத்தின் மாநிலங்கள் எல்லைக்கோட்டை பங்கிட்டு கொண்டது. அந்த வகையில் இந்த எல்லை புறம் வழியாக இரண்டு தேசங்களிலும் பிரிந்த உறவினர்கள் நண்பர்கள் சந்திப்பு போக்குவரத்து வழக்கத்தில் இருந்தது. ஆனால் இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரை கைப்பற்றும் நோக்கில் ஊடுருவ தொடங்கியது.

சுதந்திரம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் முழுமையான உள்கட்டமைப்பு பணிகளை கூட பெற்றிடாத நிலையில் பாரதத்தின் மீது காஷ்மீரை அபகரிக்கும் எண்ணத்தோடு பாகிஸ்தான் போர் தொடுத்தது . இந்த போரை நவீன ஆயுதங்கள் தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாத நிலையிலும் இந்திய ராணுவம் முழு அர்ப்பணிப்போடு உயிரை பணயம் வைத்து தேசத்தை பாதுகாக்க முன் வந்தது. ஆனாலும் ஆட்சியாளர்களின் பாகிஸ்தான் பாசமும் இங்குள்ள வாக்கு வங்கி அரசியலும் பாரத ராணுவத்தை பகடையாக்கியது. எளிதாக வெற்றி கொள்ள வேண்டிய அந்த யுத்தத்தில் எண்ணற்ற இந்திய வீரர்களை இழந்த போதும் தற்போதைய காஷ்மீர் மாநிலத்தின் கணிசமான பகுதிகள் பாகிஸ்தானின் வசம் சென்றது . இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க பாரத அப்போதைய ஆட்சியாளர்கள் ராணுவத்திற்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறுவதற்கான முயற்சிகளையும் கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை.

இதை தனக்கு எல்லா வகையிலும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் அந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பாரதத்திற்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கும் மத பயங்கரவாத தொழிற்சாலையாக மாற்றிக்கொண்டது. அந்த குறிப்பிட்ட இடங்களில் தீவிரவாத பயிற்சி மையங்கள் முகாம்களை ஏற்படுத்தி உலகம் முழுவதிலும் இருந்து தீவிரவாதத்தில் இணைபவர்களை பயங்கரவாத பயிற்சி கொடுக்கும் களமாக மாற்றிக் கொண்டது. பாரதத்திலிருந்து மூளைச்சலவை செய்யப்பட்டு எல்லைக்கு அப்பால் கொண்டு போகப்படும் இளைஞர்களுக்கு ஆயுதம் வெடிகுண்டு துப்பாக்கிச் சூடுதல் சதித்திட்டம் உள்ளிட்டவற்றிற்கான பயிற்சி களமாகவும் அந்த நிலப்பரப்பை பயன்படுத்தி கொண்டது. மேலும் பாரதத்தினங வளர்ச்சியை முடக்குவதற்கான சீன அடியாளாக செயல்படும் தனது உடன்படிக்கையின் படி பாரதத்திடமிருந்து ஆக்கிரமித்த காஷ்மீரின் ஒரு பகுதியை சீனாவிற்கு தாரை வார்த்தது. சீனாவின் மூலம் அங்கு எல்லைப் பகுதியில் இராணுவ நிலைகள் சீனாவிற்கு தேவையான போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் என்று அனைத்திற்கும் முழு அனுமதி கொடுத்துவிட்டது. அந்த வகையில் பாகிஸ்தானிடம் இருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கணிசமான பகுதிகள் தற்போது சீன ஆக்கிரமிப்பு காஷ்மீராக உருமாறி நிற்கிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதால் பாரதம் – பாகிஸ்தான் இடையேயான சிம்லா அமைதி உடன்படிக்கையின் படி அந்தப் பகுதிக்குள் பாரத ராணுவமும் பாரதத்தின் வளர்ச்சித் திட்டங்களும் போக முடியாது . ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதால் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அரசும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்தியது. அதனால் அந்த பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் வளர்ச்சி திட்டங்களோ இன்றளவும் இல்லை. இயற்கை வளம் சூழ்ந்த பகுதிகள் என்றாலும் விவசாயம் கால்நடை என்று ஆக்கபூர்வமான தொழில்களுக்கு முக்கியத்துவம் இல்லை. மாறாக எந்நேரமும் கலவரம் பதட்டம் அடக்குமுறை என்று கலவர பூமியாகவே இருக்கிறது.

பாகிஸ்தானில் உள்நாட்டு குழப்பம் நேரிடும் போதெல்லாம் இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் ஒரு பகுதியினர் தங்களை விடுவித்து பாரத காஷ்மீருடன் இணைத்து விடும்படி அவ்வப்போது போராட்டம் நடத்துவதும் அதன் காரணமாக பெறும் அடக்குமுறைகளை எதிர் கொண்டு உயிரிழப்புகள் நிகழ்வதும் அங்கு கடந்த கால வரலாறு. இந்நிலையில் சில ஆண்டுகள் முன்பு பாரதீய காஷ்மீரின் 370 வது பிரிவு சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு முழுவதுமாக பாரதத்தின் அங்கமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு தீவிரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு அமைதி வளர்ச்சி திரும்பி வருகிறது.

பாரதம் பொருளாதாரம் அரசியல் சமூகம் வளர்ச்சித் திட்டங்கள் என்று உலக வல்லரசாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் பெரும் உள்நாட்டு குழப்பம் அரசியல் ஸ்திரமின்மை நொடிந்த பொருளாதாரம் என்று திவால் நிலையை நோக்கி பயணிக்கிறது. ஆனாலும் தற்போதும் பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையோ ஆட்சியாளர்களும் அவர்களின் கடந்த கால தவறுகளை உணரவோ திருத்திக் கொள்ளவோ தயாரில்லை. ஆக்கபூர்வமான வழியில் தேசத்தை வழி நடத்தவோ பாகிஸ்தான் மக்களின் நலன் வளர்ச்சி பாதுகாப்பை உறுதி செய்யவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாரில்லை.

இந்நிலையில் உலகம் முழுவதும் கோலோச்சி வரும் பாரதத்தின் ஆளுமை. பாரதத்தின் நியாயம் அதன் பண்பு மகத்துவம் உணர்ந்து அரபு நாடுகள் கூட பாகிஸ்தானா? பாரதமா? என்று வரும்போது கணமும் யோசிக்காமல் பாரதத்தின் பக்கம் அணிவகுக்கும் சூழல். இது அனைத்தையும் கண் முன்னே பார்க்கும் பாகிஸ்தானியரில் படித்த சர்வதேச அரசியல் குறைதலும் உள்நாட்டு குழப்பங்களையும் உள்வாங்கிய பெரும்பாலான மக்கள் பாரத பாகிஸ்தான் பிரிவினையை தற்போது எதிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். மத ரீதியான பிரிவினையால் பாகிஸ்தான் நாசமானதாகவும் இனியும் இது போன்ற துரதிஷ்டம் தொடரக்கூடாது என்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் சந்திராயன் மூன்று வெற்றியை பற்றிய பாகிஸ்தானின் ஒரு உள்நாட்டு கருத்து கேட்பு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் இளைஞர்கள் பாரதம் சந்திரனுக்கு பயணப்பட்டு தான் போக வேண்டும். ஆனால் நாங்கள் இருப்பதே சந்திரனில் தான் . இதோ பாருங்கள் இங்கும் சந்திரனை போல தான். இங்கே வெளிச்சம் இல்லை . தண்ணீர் இல்லை. எந்தவிதமான உள்கட்டமைப்பு வளர்ச்சியும் இல்லை அப்படியானால் நாங்கள் சந்திரனில் இருப்பதாகத்தானே அர்த்தம் என்று வேதனையும் விரக்தியும் பொங்கும் அவர்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பது பார்த்து பாரதம் கலங்கியது.

பாகிஸ்தானின் ஒரு பகுதியான பலூசிஸ்தான் தான் மாகாணத்தில் எந்நேரமும் தனிநாடு கோஷமும் தனி ராஜாங்கமும் நடந்து வருகிறது . தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் எங்களை பாரதத்தோடு இணைய விடுங்கள் என்ற வலுவான பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷம் உருவாகி இருப்பது பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாகிறது. . இது போதாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பாரத ஆதரவு போராட்டத்திற்கு பலுசிஸ்தான் போராட்டக் குழுக்கள் முழு ஆதரவு அளிப்பதும் ஆயுதம் மற்றும் போராட்டக் கள ஆதரவு என்று அவர்கள் கணிசமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. பாரதத்தோடு இணைய வேண்டும் என்ற ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் கோரிக்கைக்கு பெரும் பலத்தை சேர்த்து வரும் பலுசிஸ்தான் போராளிகள் ஆதரவு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பலுசிஸ்தான் போராட்டக் குழுக்கள் பெயரளவில் போராட்டக் குழுக்கள் என்றாலும் உண்மையில் அவர்கள் துணிவு தொழில்நுட்பம் ஆயுதம் என்று அனைத்து வகையிலும் பாகிஸ்தான் ராணுவம் உளவுத்துறையை மிஞ்சி ஒரு படி முன்னே நிற்கும் அசகாயகர்கள். அந்த வகையில் பலுசிஸ்தான் போராட்டக் குழுக்கள் என்றாலே பாகிஸ்தான் ராணுவம் பதறி சில அடிகள் பின் வாங்கும். அப்படி இருக்க ஏற்கனவே பாரதத்தின் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட நாள் முதல் இந்திய ராணுவம் எந்த நேரம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழையுமோ ? என்ற அச்சத்தோடு இருந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு தற்போது பலுசிஸ்தான் போராட்டக் குழுக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு அவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பது சவாலாக மாறியுள்ளது .

இந்தப் போராட்டத்தின் மூலம் பாரதத்தோடு இணைய வேண்டும் என்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் போராட்டம் சர்வதேச கவனத்திற்கு எளிதாக போய்விடும். அதன் பிறகு அதனை கடுமையான அடக்குமுறைகளை கண்டு ஒடுக்க முடியாது. அதே நேரத்தில் பாகிஸ்தான் நாடு முழுவதுமே தேசப்பிரிவினை எதிராக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ராணுவம் உளவுத்துறை என்று அத்தனை மீதும் அதிருப்தியும் எதிர்ப்பு மனநிலையும் மேலோங்கி இருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்கள் மீது கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அச்சமும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது .

அதே நேரத்தில் நிலைமையை இப்படியே வேடிக்கை பார்த்தால் போராட்டக் குழுக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவம் காவல்துறை உள்ளிட்ட கட்டமைப்புகளை ஒழித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பாரதத்தோடு இணைய தயாராக இருப்பதாகவும் அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .அப்படி ஒரு நிலை வந்தால் அதன் பின் உள்ளூரிலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு மரியாதை இருக்காது. சர்வதேச அளவிலும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு இடம் இருக்காது. என்ற கவலை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் ராணுவம் உளவுத்துறையை குழப்பி வருகிறது.

பாகிஸ்தானில் சீனாவின் தலையீடு உள்கட்ட அமைப்பு வசதிகளை ஆரம்பம் முதலில் பாகிஸ்தான் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். பாகிஸ்தான் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறேன் என்று போன சீன பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தி கடும் உயிரிழப்புகளையும் கடந்த காலங்களில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இருக்கும் போராட்டக் குழுக்களுக்கும் சீனாவோ அதன் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களோ பாகிஸ்தானில் கால் பதிப்பதில் விருப்பமில்லை. அவ்வகையில் அங்கு பாரத எதிர்ப்பை விட உண்மையில் அதிகம் வேரூன்றி இருப்பது சீன எதிர்ப்பு மட்டுமே.

நிலைமை இப்படி இருக்க நாம் ஏன் தேவையில்லாமல் களமிறங்கி ஒரு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும்? அங்கிருக்கும் பலுசிஸ்தான் குழுக்கள் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் முதலில் விடுவித்துவிட்டு அவர்கள் மூலமாகவே ஒருமித்த குரலில் நாங்கள் பாரதத்தின் ஒரு அங்கமாக இணைகிறோம் என்ற பிரகடனத்தை செய்து விட்டால் அது சர்வதேச சமூகத்தின் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு எந்தவிதமான விமர்சனமும் சர்ச்சை இன்றி தானாகவே நடந்தேறுமே ? . என்ற எண்ணத்தில் இதன் பின்னணியில் பாரதத்தின் ஆட்சியாளர்கள் உளவுத்துறை ராணுவம் என்ற மும்மூர்த்திகளின் திட்டம் இருக்குமோ ? என்ற அச்சம் பாகிஸ்தான் சீனாவுக்கு மட்டுமல்ல பாரதத்தின் உள்ளிருக்கும் பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கும் கூட பரவி விட்டது.

அந்த வகையில் பலுசிஸ்தான் போராட்டக் குழுக்களையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் போராட்டத்தையும் நேருக்கு நேராக களத்தில் நின்று எதிர்கொள்ளும் துணிவு தற்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இல்லை . அதன் பின்னணியில் இருக்கும் சீன ராணுவத்திற்கும் இல்லை . ஆனால் இந்த சீன பாகிஸ்தான் இரண்டு ராணுவங்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிக்க தேவையான ஆயுத பலமும் அரசியல் பலமும் பலுசிஸ்தான் போராட்டக் குழுக்களுக்கு நிரம்ப இருக்கிறது . அந்த வகையில் நடப்பவை யாவும் நன்மைக்கே என்று பாரதத்தின் ஆட்சியாளர்கள் அமைதியாக ஆக்கிரமிப்பு பகுதியில் நடக்கும் களேபரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் . கூடிய விரைவில் பலுசிஸ்தான் போராட்டக் குழுக்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் மக்களும் இணைந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு இயந்திர நிலைகளை முழுமையாக கைப்பற்றி விட்டார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரும் முழுமையாக விடுபட்டு பாரதத்துடன் இணைகிறது என்ற அறிவிப்பு வரக்கூடும்.


Share it if you like it