இந்தியாவை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்… பாக்.கிற்கு முட்டு கொடுத்த சன் நியூஸ்!

இந்தியாவை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்… பாக்.கிற்கு முட்டு கொடுத்த சன் நியூஸ்!

Share it if you like it

பாகிஸ்தான் தோல்விக்கு முட்டு கொடுக்கும் விதமாக செய்தி வெளியிட்ட சன் நியூஸ் குணசேகரனுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியின் தலைமை நிர்வாக ஆசிரியராக இருப்பவர் குணசேகரன். இவர், வெளியிடும் செய்திகள் பா.ஜ.க, மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவே இருக்கும். காங்கிரஸ், ஆளும் மாநிலங்களில் பெரும் குற்றமே நிகழ்ந்தாலும் அது குறித்து செய்திகளை வெளியிடாமல் கப்சிப் என மெளனம் காப்பது இவரது வழக்கம். அதே வேளையில், பா.ஜ.க. மாநிலத்தில் ஒரு சிறு தவறு நடந்தாலும் உண்மை வெளிவரும் முன்பே சன் நியூஸ் அவதூறு பரப்புவதை தனது கொள்கையாக கொண்டு இருக்கிறது.

குறிப்பாக, சன் நியூஸில் வரும் செய்திகள் அனைத்தும் உ.பி, குஜராத் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே இன்று வரை இருந்து வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய முதியவரின் தாடியை வழித்து, ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறுமாறு அவரை வற்புறுத்தி ஒரு கும்பல் தாக்கியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால், உண்மையை அறிந்து கொண்ட சன் நியூஸ் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக மீண்டும் ஒரு செய்தியினை வெளியிட்டு பொதுமக்கள் முன்பு அசிங்கப்பட்டு நின்றதை தமிழகம் நன்கு அறியும்.

இப்படிப்பட்ட சூழலில், ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இப்போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான முதல் லீக் சுற்று போட்டி நேற்றிரவு நடந்தது. இதில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, விளையாடிய இந்திய அணி இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை இந்திய ரசிகர்களுடன் இணைந்து கொண்டு, ஆப்கான் நாட்டை சேர்ந்த ரசிகர்களும் கொண்டாடி இருந்தனர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த சன் நியூஸ் ஊடகம், ’ஜெயிக்கிறமோ.. இல்லையோ.. சண்ட செய்யணும்..! என்று பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் விதமாக செய்தி வெளியிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it