சந்தை மதிப்பு ரூ.300 கோடி: பாக்., மீனவர்கள் 10 பேர் கைது….  இந்தியா அதிரடி!

சந்தை மதிப்பு ரூ.300 கோடி: பாக்., மீனவர்கள் 10 பேர் கைது…. இந்தியா அதிரடி!

Share it if you like it

சட்ட விரோதமாக போதை பொருட்களை கடத்திய பாகிஸ்தானை சேர்ந்த 10 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத தேசத்துடன் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடலோர எல்லைகளை கொண்டுள்ளன. அந்தவகையில், மேற்கூறிய நாடுகள் வழியாக சமூகவிரோதிகள் ஆயுதங்கள், போதை பொருட்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை, இந்திய கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், குஜராத் மாநிலம் துவாராக பகுதிக்குள் பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று சந்தேகத்திற்குறிய வகையில் சுற்றி வந்துள்ளது. இதையடுத்து, குஜராத் பயங்கரவாத தடுப்பு படை, இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ஏராளமான ஆயுதங்கள் மற்றும் ரூ. 300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேரை இந்திய கடலோர காவல் படையிர் கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு படை இணைந்து இதுவரை 7-வது முறையாக போதைப் பொருட்கள் கடத்தலை தடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it