ராணுவத்திற்காக 84 பில்லியன் டாலர்களை செலவிட்ட இந்தியா !

ராணுவத்திற்காக 84 பில்லியன் டாலர்களை செலவிட்ட இந்தியா !

Share it if you like it

கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த உலக நாடுகளின் பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த பட்டியலில் 916 பில்லியன் டாலர்களை செலவிட்டு அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா 296 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு இரண்டாம் இடத்திலும், – 109 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு ரஷ்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ராணுவத்திற்காக 84 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ள இந்தியா, இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சவுதி சவுதி அரேபியா , இங்கிலாந்து முறையே ஐந்து மற்றும் ஆறாம் இடத்தை பெற்றுள்ளன.

ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஜெர்மனி, உக்ரைன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுடன் பாகிஸ்தான் 30-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.2% அதிகம் செலவளித்துள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2022ஆம் ஆண்டிலும் இராணுவத்துக்காக செலவு செய்வதில் இந்தியா நான்காவது பெரிய நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவச் செலவு 81.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, அதுவும் அதற்கு முந்தைய ஆண்டில், 2021 ஆண்டில் இருந்ததை விட இருந்ததை விட 6% அதிகம் . ராணுவத் துறைக்கு இந்திய அரசு ஒதுக்கும் நிதி ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது.

இந்தியாவின் எல்லை பகுதியான லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட போர் பதற்றத்துக்குப் பின் , நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் , ராணுவத்துறையை மேம்படுத்திடவும் மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, ராணுவத்துக்கு அதிநவீன தளவாடங்கள், போர் விமானங்கள் , பீரங்கிகள் வாங்குவதற்கும், மேலும் இராணுவ உள்கட்டமைப்பை வலுபடுத்ததற்கும் முன்னுரிமை கொடுத்தது.

2023ம் ஆண்டில் சீனா, ராணுவத்துக்காக ஏறத்தாழ 296 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியுள்ளது, இது 2022 ஆம் ஆண்டை விட 6% அதிகமாகும். 2022 ஆம் ஆண்டில் சீனாவின் இராணுவச் செலவு 292 பில்லியன் டாலர்களாக இருந்தது.

சீனாவுக்கு இணையாக அல்லது சீனாவை விட அதிக வலிமை பொருந்திய இராணுவமாக 14 லட்சம் வீரர்களை கொண்டுள்ள இந்தியாவும் இராணுவத்திற்கான நிதியை உயர்த்திக்கொண்டே வருகிறது.


Share it if you like it