கனடா பிரதமருக்கு எதிராக சர்வதேச அளவில் பிடியை இறுக்கும் பாரதம் – சிக்கலில் தவிக்கும் கனடா

கனடா பிரதமருக்கு எதிராக சர்வதேச அளவில் பிடியை இறுக்கும் பாரதம் – சிக்கலில் தவிக்கும் கனடா

Share it if you like it

சமீபமாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் அவர்களின் ஆதரவாளர்கள் பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் காரணமான பல்வேறு பயங்கரவாதிகள் உலகம் முழுவதிலும் மர்மமாக மரணித்து வருகிறார்கள் . இதில் கனடா நாட்டில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜார் என்னும் காலிஸ்தான் பயங்கரவாதியின் மரணத்திற்கு பாரதத்தின் உளவுத்துறை மீது கனடா குற்றம் சாட்டியது. கனடாவில் பாரத தூதரக அதிகாரியாக இருந்த பவன் குமார் ஐபிஎஸ் என்னும் உளவுத்துறை பின்னணி கொண்ட தூதரக அதிகாரியை ஹர்திக் சிங் நிசார் கொலை வழக்கில் குற்றம் சாட்டி கனடா நாட்டை விட்டு வெளியேற்றியது.

பதிலுக்கு கனடா தூதரை பாரதம் இங்கிருந்து வெளியேற்றியது. கனடா நாட்டு மக்களுக்கு இந்திய விசா வழங்குவதையும் நிறுத்தி வைத்தது. தொடர்ச்சியாக பல்வேறு வெளியுறவு துறை ராஜிய நடவடிக்கைகள் மூலமும் பாரதம் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுத்ததில் கனடா நாடு ஆடிப் போனது. தன் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள தனக்கு ஆதரவாக பாரதத்தை கண்டித்து அறிக்கை விடும்படி 5 கண் நாடுகள் கூட்டமைப்பில் இருந்த தனது நட்பு நாடுகளை கனடா வேண்டிக் கொண்டது .ஆனால் உரிய ஆதாரம் இன்றி பாரதத்தின் மீது குற்றச்சாட்டு வைக்க அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மறுத்துவிட்டது. மாறாக கனடாவின் இந்த செயல்பாடுகளை கண்டித்து பாரதம் போன்ற பொறுப்புள்ள நாட்டை பகைத்துக் கொள்வது கனடாவிற்கு இழப்பை தரும் என்று எச்சரிக்கையும் அறிவுரையும் செய்தது.

இனி பாரதத்தை நோக்கி ஒரு அடி எதிரடியாக எடுத்து வைத்தாலும் அதன் விளைவுகள் தனக்கு உள்நாட்டில் ஏற்படும் எதிர்ப்பையும் அவமதிப்பையும் தேடி தரும் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட கனடா நாட்டு பிரதமர் தனது வெளியுறவுத்துறை பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் மூலம் பாரதம் கனடா இடையேயான ராஜ்ஜிய முருகலுக்கு முடிவு கட்டி நல்லெண்ணம் நட்புறவுகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் கனடாவின் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு மர்மமான மரணம் அதன் கொலை பின்னணி பற்றிய விவகாரத்தை தனது தேசத்தின் தூதரக அதிகாரியையும் தனது தேசத்தின் உளவுத்துறையையும் எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காழ்ப்புணர்வோடு அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வைத்து கனடா நாட்டு பிரதமர் குற்றம் சாட்டியதை பாரதம் சர்வதேச அளவில் அவமதிப்பாக உணர தொடங்கியது. இதன் காரணமாக இந்த விவகாரத்தின் உண்மையான பின்னணி அதன் முழுமையான சூழ்ச்சிகளை வெளிக்கொணறும் முயற்சியிலேயே முன்னோக்கி நகர்கிறது.

கனடா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஐந்து கண் என்னும் உளவு அமைப்பில் ஏழாவது கண்ணாக பாரதம் இணைய இருந்ததில் கனடாவிற்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் கனடாவிற்கு எப்போதும் பாரதத்தின் மீது இருக்கும் ஒரு வன்மம் அவமதிப்பு உணர்வுகளை பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட நாடுகள் பின்னிருந்து பயன்படுத்தி வந்தது. இதை எல்லாம் உணர்ந்து கொண்ட பாரதம் கனடாவின் இந்த சூழ்ச்சியையும் அதன் பின்னிருக்கும் நாடுகளின் முகமூடியையும் சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான நகர்வுகளை தொடர்கிறது .இதனால் ஆடிப்போன கனடா நாட்டு பிரதமர் ஏற்கனவே உள்நாட்டில் பாரதத்தின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து தனது செல்வாக்கு சரிந்து இருப்பதும் எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் என்று அனைவரும் தன்னை எதிர்க்கும் மனநிலைக்கு வந்து விட்டதையும் உணர்ந்து கொண்டு இனியும் பாரதத்தை எதிர்த்தால் தனது பதவியே தப்பாது என்ற நிலையில் சமாதான பேச்சுக்கு தயாரானார்.

ஆனால் கனடா நாட்டு வெளியுறவுத் துறையிடம் கடந்த காலங்களில் பாரதம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பற்றிய புகார் பட்டியல் ஆவணங்கள் அளித்ததில் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற விவகாரத்தை கையில் எடுத்து பாரதம் கனடாவை நெருக்குகிறது. மறுபுறம் கடந்த மாதம் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா நாட்டு பிரதமர் தனி விமானத்தில் புது தில்லி வந்தடைந்தார். அவர் சர்வதேச தலைவர்கள் அனைவருக்கும் பாரதத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்தோம்பலை ஏற்கவில்லை .மாறாக அவரது சொந்த ஏற்பாடு விருப்பத்தின் பெயரில் ஏற்பாடுகளை தாமாகவே செய்து கொண்டிருந்தார். இதன் பின்னணியில் பாரதத்தில் இருந்த கனடா நாட்டு தூதரக அதிகாரிகளும் இருந்ததாக பாரதம் சந்தேகிக்கிறது.

பாதுகாப்பு காரணங்களாக கனடா நாட்டு பிரதமர் பயணித்த விமானத்தை சோதனை செய்ததில் அதில் விரும்பத்தகாத சமிக்ஞை இந்திய உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்றது. ஆனாலும் ஜி 20 மாநாடுகள் நடக்கும் தருணம் ஒரு சர்வதேச தலைவரின் வருகை அவரது விமானத்தில் பாதுகாப்பு சோதனைகள் பற்றிய குளறுபடிகள் வெளியே கசிந்தால் அது ஜி 20 மாநாட்டில் மாண்பை சிதைத்து விடும். மேலும் ஏற்கனவே முருகலில் இருக்கும் பாரதம் கனடா இடையே அது மேலும் சிக்கலை உருவாக்கும். ஜி 20 நாடுகளின் வெற்றிகரமான கூடுகை ஆக்கபூர்வமான அமர்வுகள் ஆசிய ஐரோப்பா கண்டங்களை இணைக்கும் தரைவழிப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை எதிர்நோக்கி இருந்த பாரதத்திற்கு கனடா நாட்டு பிரதமர் பயணித்த விமானம் பற்றிய விவகாரத்தை பூதாகரமாக்கி மலிவான அரசியல் செய்ய விருப்பம் இல்லை. அதன் காரணமாக அந்த விவகாரம் சம்பந்தமாக கண்ணியமான மௌனத்தை பாரதம் இது நாள் வரை கடைபிடித்தது.

ஆனால் ஒரு சர்வதேச மாநாட்டிற்கு கலந்து கொள்ள வரும் ஒரு நாட்டின் பிரதமர் அவரது தனி விமானத்தில் சோதனைகள் அதன் முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்களை பற்றி இந்திய தூதரக அதிகாரியின் தலைமையில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த பாதுகாப்பு சோதனைகள் அவற்றில் கிடைக்கப்பெற்ற சமிக்ஞைகள் எல்லாம் உலக அளவில் கனடா நாட்டிற்கு அவமதிப்பையும் கனடா நாட்டு பிரதமர் பாரதத்தின் மீது கொண்டிருக்கும் குறைந்த மதிப்பீடு வண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதுவரையில் இந்த குற்றச்சாட்டுகளை கனடா நாட்டு பிரதமர் அலுவலகமும் அவர்களின் அரசு தரப்பில் இருந்தோ மறுக்கவோ எதிர்க்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி 20 மாநாடுகள் நடைபெறும் சமயத்தில் நடந்த இந்த பாதுகாப்பு சோதனைகள் அதன் முடிவுகள் வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற தார்மீக அடிப்படை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த விவகாரங்கள் கசியாமல் பார்த்துக் கொண்டது. அதன் அடிப்படையில் ஜி 20 மாநாடுகள் எந்த குளறுபடியும் இல்லாமல் சமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு குளறுபடிகளை தெரிந்து செய்பவர்கள் நிச்சயம் இதன் பின்னணியில் பாரதத்திற்கு எதிராக ஏதேனும் சூழ்ச்சிகளை வைத்திருப்பார்கள் என்று பாரதம் கணித்தபடியே கனடா தனது கைவரிசையை காலிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்தை முன்வைத்து பாரதத்திற்கு எதிரான சர்வதேச அரசியலை கையில் எடுத்தது.

ஒரு சர்வதேச மாநாடு ஜி 20 அமர்வாக தனது தேசத்தில் நடைபெறும் போது சங்கடமான விவகாரங்கள் வெளியில் வரக்கூடாது. அதன் மூலம் தனது தேசத்திற்கு எந்த ஒரு சர்ச்சையும் அவமதிப்பும் வந்து விடக்கூடாது என்ற உச்சபட்ச கண்ணியம் காத்த பாரதத்திற்கு எந்த காரணமும் இல்லாமல் தனது தேசம் சர்வதேச அளவில் அவமதிக்கப்படுவதும் அதை கனடா நாட்டை முன் நின்று செய்வதும் ஆத்திரமூட்டியது. இதன் காரணமாக கனடா நாட்டு பிரதமர் அவரின் செயல்பாடுகள் அதன் பின்னணியில் இருக்கும் நோக்கங்கள் அனைத்தின் நீக்கமற நிறைந்திருக்கும் பாரத எதிர்ப்பு மோடி எதிர்ப்பு ராஜ்ய ரீதியாக பாரதத்திற்கு அவப்பெயரை உண்டு பண்ண வேண்டும் என்ற வண்ணம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தி அவரின் செயல்பாடுகள் பாதுகாப்பு சோதனைகளில் கிடைத்தவற்றை எல்லாம் பொது வெளியில் இன்று அம்பலப்படுத்தி விட்டார்கள். இதன் மூலம் சர்வதேச அரங்கில் பெரும் அவமதிப்பையும் தலைக்குனிவையும் கனடா நாட்டு பிரதமர் சார்பாக கனடா நாடு எதிர்கொள்கிறது.

இந்த சம்பவங்களின் கோர்வையின் பின்னணியில் கனடா நாட்டு பிரதமர் முழுமையான காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளராகவும் அவர்களின் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிபணிந்த வாராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த வாக்கு வங்கி அரசியல் அதனால் தனக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயம் கருதி அவர் பாரதத்தை உலக அரங்கில் அவமதிக்க வேண்டும் . அதுவும் காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தை முன்வைத்தே அது நடக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு செயல்பட்டது இதன் மூலம் பொது வெளியில் அம்பலமாகிறது. மேலும் தனக்கு நிகராக 5 கண் நாடுகள் வரிசையில் ஏழாவது கண்ணாக பாரதம் உள் நுழைவதை கனடா விரும்பவில்லை. அதை தடுப்பதற்காகவும் அது வன்மம் கொண்டு செயல்பட்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.

ஆனால் அனைத்தையும் கனடா பாரதம் என்ற இரு தரப்பிலும் கிடைக்க பெறும் ஆவணங்கள் விசாரணை தெளிவுகள் என்று அனைத்தையும் சீர்தூக்கி பார்க்கும் உலக நாடுகள் முழுமையாக பாரதத்தின் பக்கம் ஆதரவாக நிற்கிறது. மறுபக்கம் கனடா பிரதமரின் இந்த சில்லறைத்தனமான அரசியல் வன்மத்தோடு பாரதத்தை அணுகும் செயல்பாடு உள்ளிட்டவற்றை கண்டிக்கிறது. அதே நேரத்தில் ஐந்து கண் உளவு அமைப்பு நாடுகள் ஏழு கண் நாடுகள் ஆக விஸ்தரிக்கப்படுவதும் அதில் பாரதம் ஒரு அங்கமாக இணைக்கப்படுவதையும் முழு முனைப்போடும் செயல்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் பாரதத்திற்கு ஒரு அவப்பெயரை உருவாக்க வேண்டும் .பாரதத்தின் உளவுத்துறை ஏழாவது கண் என்ற உச்சபட்ச அந்தஸ்தோடு உலகளவில் வளர்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திட்டமிட்டு செயல்பட்ட கனடா பிரதமரின் சூழ்ச்சியும் அதன் பின்னிருந்த சர்வதேச பகை நாடுகளின் திட்டமும் இதன் மூலம் தவிடு பொடியாகி இருக்கிறது.

பாரதம் போன்ற நல்லெண்ணமும் நட்புறமும் வேண்டும் ஒரு நாட்டை அவமதித்தது. இரு நாட்டு ராஜிய ரீதியிலான உறவை சீர்குலைத்தது. அதன் மூலம் கனடா பாரதம் இடையேயான நல்லுறவு சீரழிந்ததையே ஏற்றுக் கொள்ளாத கனடா மக்கள் அதன் காரணமாகவே பெரும் எதிர்ப்பையும் கேள்விகளையும் கனடா நாட்டு பிரதமருக்கு எதிராக முன் வைத்தார்கள். ஆனால் தற்போது கனடா நாட்டு பிரதமரின் இந்திய வருகையின் போது நிகழ்ந்த பொறுப்பற்ற செய்கையும் அவரது தனிமனித கண்ணியம் ஒழுக்கமற்ற செயல்பாடுகள் காரணமாக கனரா நாட்டு பிரதமர் பதவியும் கனடா நாடு உலக அரங்கில் அவமதிப்பதை கண்டு வெகுண்டெழுகிறார்கள்.

நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் சீர்தூக்கி பார்க்கும் போது தற்போது உள்நாட்டில் தங்களின் ஆதரவு நிலைப்பாட்டில் வெளிப்படையாக பாரதத்தை எதிர்த்து செயல்பட வேண்டும் என்ற பெரும் நெருக்கடியும் அழுத்தமும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியிலிருந்து கனடா நாட்டு பிரதமருக்கு நடப்பது கண்கூடாக உணர முடிகிறது. அதே நேரத்தில் இந்த காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற விவகாரத்தை வைத்து தேவையில்லாமல் உள்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குழப்பங்கள் மறுபுறம் ராஜ்ய ரீதியாக பாரதத்தை எதிர்க்கும் மனோநிலை இவற்றையெல்லாம் விரும்பாத கனடா மக்கள் தங்களை சொந்த நாட்டு பிரதமரை எதிர்த்து கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.

இதன் மூலம் கனடா நாட்டு பிரதமர் தனது எதிர்கால அரசியல் ஆதாயத்திற்காக சரிந்த செல்வாக்கை சரி செய்யப் போய் இன்று இருக்கும் செல்வாக்கையும் பதவியையும் இழக்கும் நிலையில் வந்து நிற்கிறார். எதிர்க்கட்சிகள் ஒருபுறம் ஊடகங்கள் ஒருபுறம் பொதுமக்கள் ஒரு புறம் என்றால் தன் சொந்த கட்சிக்காரர்களும் நலன் விரும்பிகளுமே கனடாவில் நலன் கருதி பிரதமர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதை உசிதம் என்று அறிவுரைகளும் ஆலோசனையும் வழங்குவதில் அவர் நிலைகுலைந்து இருக்கிறார். இவ்வளவும் நடந்த பிறகும் கூட கனடா நாட்டு குடிமகன் கொல்லப்பட்ட விவகாரம் என்ற அடிப்படையில் ஹர்திப் சிங் நிசார் விவகாரத்தில் பாரதத்தின் தூதரக அதிகாரி அவரின் தனிப்பட்ட செயல்பாடுகளை முன்வைத்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பாரதத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம் பற்றி இன்றுவரை கனடா நாட்டு பிரதமர் மௌனம் காக்கிறார்.

எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் குற்றம் சாட்டுவதற்கான உகாந்தினங்கள் ஏதுமின்றி தனது தேசத்தின் உளவுத்துறை அவமதிக்கப்பட்டது தனது நாட்டு தூதரக அதிகாரி கொலை குற்றம் சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது உலக நாடுகள் மத்தியில் தன் தேசத்தின் உளவுத்துறை வெளியுறவு துறை பற்றி அவதூறு பிரச்சாரம் செய்தது என்று அடுக்கடுக்கான கனடா நாட்டு பிரதமரின் செய்கைகளால் பாரதம் நடந்தவைகளுக்கெல்லாம் உரிய விளக்கம் அதற்கு உரிய ராஜ்ய நடவடிக்கைகள் இல்லாமல் வெறுமனே நல்லெண்ணம் என்று பேசுவதில் அர்த்தம் இல்லை என்று மௌனம் காக்கிறது.

பாரத தரப்பிலிருந்து உளவுத்துறை வெளியேறுப்பு துறையால் சர்வதேச பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடியுரிமை கடவுச்சீட்டு சொத்துக்கள் பொருளாதாரம் மூலங்கள் ஆவணப்படுத்தப்பட்டு கனடா நாட்டு அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அந்த அமைப்புக்கள் அவர்களின் செயல்பாடுகளை தடை செய்வதற்கு ராஜ்ய ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறது இதன் மூலம் கனடா நாட்டு அரசு உள்நாட்டில் இருக்கும் குழப்பங்கள் கனடா நாட்டு பிரதமரின் செய்கையால் பாரதம் முன்னெடுக்கும் ராஜ்ய நகர்வுகள் காலிஸ்தான் பயங்கரவாதத்தை முன்வைத்து பாரதத்தின் வெளியுறவுத் துறை முன்னெடுக்கும் நகர்வுகள் என்று எதை சமாளிப்பது எதற்கு எப்படி பதில் தருவது என்று தெரியாமல் கனடா நாட்டு பிரதமரின் அடுத்தடுத்த குழப்பங்களால் நிலைகுலைந்து நிற்கிறது.


Share it if you like it