Share it if you like it
மூன்று வருடங்களில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
உங்களுக்கு தெரியுமா?
- இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை துவக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை இந்த மாதம் சந்திக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்.
- அமெரிக்காவின் ‘அல்டைர்’ நிறுவனம் தன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளது.
- உலகிலேயே 3வது அதிக மதிப்புள்ள சந்தை மூலதனத்தை கொண்டுள்ள விமான நிறுவனமாக சாதனை படைத்தது ‘இண்டிகோ’ நிறுவனம்.
- 2028ல் உலக முன்னேற்றத்திற்கு சீனாவை விட அதிகமான பங்களிப்பை இந்தியா அளிக்கும் என ப்ளூம்பர்க் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
5.ஆப்பிள் நிறுவனத்தின் 7 ல் ஒரு ஐ- ஃ போன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
- மூன்று வருடங்களில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியா! பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கடும் உழைப்பு.
Share it if you like it