செய்தி ஊடகம் ஒரு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. அப்படி என்றால் தேசிய பாதுகாப்பு, தேசிய நலன் என பற்றுடன் இருக்க வேண்டிய துறை செய்தி ஊடகம்.
ஆனால் பாரதத்தின் துரதிருஷ்டம் பத்திரிக்கைத்துறை கம்யூனிச சிந்தனையாளர்கள் இடம் சிக்கி தவித்து வருகிறது. கம்யூனிச சிந்தனையாளர் என்றால் சீன அரசின் கைக்கூலி என்றே பொருள். சீன அரசு பாரதத்திற்கு என்ன தீங்கு செய்ய நினைக்கிறதோ அதை கம்யூனிச இயக்கங்கள், கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்களை வைத்து இதுவரை சாதித்து வருகிறார்கள்.
அந்தத் திட்டம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியுள்ளது. பாரத மக்களுக்கு மத்திய அரசின் மீதும், பாரத ராணுவத்தின் மீதும் அவ நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்று பத்திரிக்கை ஊடகத்துறையில் இருக்கும் கம்யூனிச சிந்தனையாளர்கள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் Business Standard என்கின்ற ஆங்கில பத்திரிக்கையில் இந்தியா சீனாவுக்கு இடையான ஒரு ஒப்பந்தம் உடைந்து சுக்கு நூறாகி விட்டதாகவும் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே எல்லையில் சண்டை ஏற்பட்டு வருவதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்தது மட்டுமல்லாமல், இது பொய் என்று அறிக்கை விடும் அளவிற்கு கசப்பான ஒரு சூழ்நிலைக்கு பாரத ராணுவத்தை, கம்யூனிச ஊடகம் தள்ளி இருக்கிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் சீன கம்யூனிச கைக்கூலிகளாக இந்தியாவில் வாழும் கம்யூனிச ஆதரவாளர்கள் செயல்படப் போகிறீர்கள்?