புலம்பெயர்ந்து இந்தியா வந்த இந்துகளுக்கு இந்திய குடியுரிமை !

புலம்பெயர்ந்து இந்தியா வந்த இந்துகளுக்கு இந்திய குடியுரிமை !

Share it if you like it

பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த 6 இந்துகளுக்கு இந்திய குடியுரிமை இன்று வழங்கப்பட்டது.

ராஜஸ்தானில் 2010-ல் புலம்பெயர்ந்த பிரேமலதா, சஞ்சய் ராம், பெஜல், ஜஜ்ராஜ், கெகு மை மற்றும் கோமந்த ராம் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷஃபாலி குஷ்வாஹா வழங்கினார்.

பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இடம்பெயர்ந்த பிரேம்லதா (41), “இந்தியாவுக்கு திரும்பிய பின்னர்தான் நாங்கள் சுதந்திரத்தை உணர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராம், “நான் 10 ஆண்டுகளாக குடியுரிமை பெற முயற்சித்து வருகிறேன். இப்போதுதான் பல ஆண்டுகளுக்கு பிறகு அது சாத்தியமாகியுள்ளது” என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் குடியுரிமை விண்ணப்பங்களை விதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பரிசீலித்து வருகிறது. தகுதியுடைய 319 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது என கூடுதல் ஆட்சியர் தெரிவித்தார்.


Share it if you like it