பாய்ந்த ஜெய்சங்கர்… பம்மிய அமெரிக்கா..!

பாய்ந்த ஜெய்சங்கர்… பம்மிய அமெரிக்கா..!

Share it if you like it

பாகிஸ்தானுக்கு போர் விமான உதிரி பாகங்களை வழங்கிய விவகாரத்தில், பயங்கரவாதத்தை தடுப்பதற்காகத்தான் என்று சொல்லி யாரையும் முட்டாளாக்க வேண்டாம் என்று அமெரிக்காவை வெளுத்து வாங்கி இருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதனால் அரண்டுபோன அமெரிக்கா, இந்தியாவும் நாங்களும் பங்காளிகள் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறது.

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றிருக்கிறார். தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானுக்கு ‘எப் – 16’ ரக போர் விமானங்களை விற்பனை செய்வது குறித்து பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், ”அமெரிக்காவிடம் வாங்கப்படும் போர் விமானங்களை பாகிஸ்தான் எதற்காக பயன்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால், பாகிஸ்தானுக்கு எந்த பயனும் இல்லை. அமெரிக்காவின் நலனுக்கும் இது உதவாது. அதேசமயம், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவே போர் விமானத்தை வழங்கியதாகக் கூறி அமெரிக்கா யாரையும் முட்டாளாக்க வேண்டாம்” என்று ஆவேசமாகக் கூறினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்காவில் உள்ள பிரதான ஊடகங்களில் இந்தியா குறித்து ஒருதலைபட்சமான செய்திகள் வெளியாகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இவற்றை எழுதுபவர்களில் சிலர் இந்தியாவின் நலனுக்காக அமெரிக்காவில் இருந்து உழைப்பதாக தங்களை வெளிக்காட்டிக் கொள்கின்றனர். இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டின் உண்மையான நிலை என்ன என்பது பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தெரியாது. எனவே, இதுபோன்ற செய்திகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஊடகங்கள் எந்த செய்தியை வெளியிடுகின்றன, எதை மூடி மறைக்கின்றன என்பது முக்கியம். இதை வைத்துத்தான் கருத்துக்களும், அபிப்ராயங்களும் உருவாக்கப்படுகின்றன” என்றார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “பாகிஸ்தானுடன் எங்கள் உறவை நாங்கள் பார்க்கவில்லை, மறுபுறம், இந்தியாவுடனான எங்கள் உறவை ஒருவருக்கொருவர் உறவாகவும் நாங்கள் பார்க்கவில்லை. இவை இரண்டும் எங்களுடைய பங்காளிகள், ஒவ்வொன்றிலும் வெவ்வேறு முக்கியத்துவம் வாய்ந்த புள்ளிகள் உள்ளன. நாங்கள் இருவரையும் கூட்டாளர்களாக பார்க்கிறோம், ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் பல சமயங்களில் பகிரப்பட்ட ஆர்வங்களைக் கொண்டுள்ளோம். மேலும், இந்தியாவுடன் நாங்கள் கொண்டுள்ள உறவு தனித்து நிற்கிறது. பாகிஸ்தானுடன் நாங்கள் வைத்திருக்கும் உறவும் தனித்து நிற்கிறது” என்று கூறி, இந்தியாவை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்.


Share it if you like it