Share it if you like it
இந்திய பட்ஜெட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
- இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன். ஆண்டு 1869 பிப் -18.
- சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். ஆண்டு 1947 நவம்பர் – 26.
- முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் என பல்வேறு பதவிகளை அலங்கரித்த மொராஜி தேசாய் 10 முறை இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். ஆண்டு 1962-69
- இந்திய பட்ஜெட் 1955 – ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வந்தன.
- இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் இந்திரா காந்தி. ஆண்டு 1970 ( மொராஜி தேசாய் தனது பதவியை ராஜினாமா செய்த பின்பு நிகழ்ந்த சம்பவம்)
- வாரத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறை கடந்த 2000 ஆண்டு வரை தொடர்ந்தது. அதன்பின், 2001 –ஆம் ஆண்டு காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் நேரம் மாற்றப்பட்டன.
- பொருளாதார பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் 2017 – ஆம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. பிப், 1 – ஆம் தேதி அது நடைமுறைக்கு வந்தது.
- காகிதம் இல்லாத பட்ஜெட்டை 2021- ஆம் ஆண்டு பிப் -1 ஆம் தேதி தாக்கல் செய்தவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it