இந்திய பட்ஜெட்டின் வரலாறு!

இந்திய பட்ஜெட்டின் வரலாறு!

Share it if you like it

இந்திய பட்ஜெட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

  1. இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன். ஆண்டு 1869 பிப் -18.
  2. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். ஆண்டு 1947 நவம்பர் – 26.
  3. முன்னாள் நிதியமைச்சர், பிரதமர் என பல்வேறு பதவிகளை அலங்கரித்த மொராஜி தேசாய் 10 முறை இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். ஆண்டு 1962-69
  4. இந்திய பட்ஜெட் 1955 – ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வந்தன.
  5.  இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் இந்திரா காந்தி. ஆண்டு 1970 ( மொராஜி தேசாய் தனது பதவியை ராஜினாமா செய்த பின்பு நிகழ்ந்த சம்பவம்)   
  6. வாரத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறை கடந்த 2000 ஆண்டு வரை தொடர்ந்தது. அதன்பின், 2001 –ஆம் ஆண்டு காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் நேரம் மாற்றப்பட்டன.
  7. பொருளாதார பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் 2017 – ஆம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. பிப், 1 – ஆம் தேதி அது நடைமுறைக்கு வந்தது.
  8. காகிதம் இல்லாத பட்ஜெட்டை 2021-  ஆம் ஆண்டு பிப் -1 ஆம் தேதி தாக்கல் செய்தவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it