பிரபல இந்திய பாடகி அனட் பிலிப் கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1959-ம் ஆண்டு முதல் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில், பிரபல இந்தியப் பாடகரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவருமான அனெட் பிலிப் கலந்து கொண்டார். அந்த வகையில், இந்தியாவின் பாரம்பரியமான உடையான பட்டுப்புடவையில் அவர் சென்று இருக்கிறார்.
இவரது, உடையை பார்த்த வெளிநாட்டவர் பலர் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் பட்டுப்புடவை குறித்து அனெட் பிலிப்பிடம் கேட்டார். இதற்கு, அவர் கூறியதாவது ;
இது எங்கள் இந்தியாவின் காஞ்சிபுரம் பட்டுப்புடவை எங்கள் நாட்டு நெசவாளர்களால் உருவாக்கப்பட்டது. என் நாட்டு பாரம்பரிய உடையை அணிவதிலும் என் நாட்டு கலாசாரத்தை பிரதிபலிப்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.