அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா சாதனை..!

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா சாதனை..!

Share it if you like it

இந்தியாவிற்கு முன்னதாக தடுப்பூசி போடும் பணியை துவங்கியது அமெரிக்கா, தீவிரமாக தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டு இதுவரை சுமார் 32.33 கோடி தடுப்பூசிகள் அந்நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டுவந்த நிலையில், இந்தியா இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 ‛டோஸ்’ தடுப்பூசிகளை செலுத்தி உள்ளது. இதனால் அமரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்திய முதலிடத்தை நெருங்கி உள்ளது.

சீனா முதலிடத்தில் இருப்பதாக மார்தட்டிக் கொண்டாலும், அந்நாடு தடுப்பூசி செலுத்திய விவரங்களை தெளிவாக வெளியிடவில்லை. அந்நாட்டை சேர்ந்த பலரே அதில் சந்தேகம் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it