மோடியின் தேசப்பற்றினால் ஈர்க்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏ !

மோடியின் தேசப்பற்றினால் ஈர்க்கப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏ !

Share it if you like it

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியில், அதன் எம்எல்ஏ பூபேந்திர பயானி, மக்களுக்கு சேவை செய்ய ஆம் ஆத்மி சரியான தளம் இல்லை எனக் கூறி, மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ பூபத் பயானி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். பின்னர், நிருபர்களிடம் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்து கொள்வதாகவும், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தனது பணியின் மூலம் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற விதம் தன்னை ஈற்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலகம் முழுவதும் இந்தியாவின் அந்தஸ்து வளர்ந்துள்ளது. நான் ஒரு தேசியவாதி என்பதால், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நாட்டுக்கு சேவை செய்ய முடியாது. அதனால் ஆம் ஆத்மி கட்சி மற்றும் குஜராத் விதான் சபாவில் உள்ள அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தேன்” என்று கூறினார்.

ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள விசாவதார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பூபத் பயானி, காந்திநகரில் குஜராத் சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயானி தனது ராஜினாமா கடிதத்தில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார், ஆனால் இந்த முடிவுக்குப் பின்னால் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை. ‘பயானியின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்’ என குஜராத் சட்டசபை செயலர் டி.எம்.படேல் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து எம்எல்ஏக்களில் பயானியும் ஒருவர், பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 156 இடங்களைக் கைப்பற்றி அமோக பெரும்பான்மையுடன் வென்றது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it