சிறுபான்மையினர் அகதிகளாக வரும்போது குடியுரிமை வழங்குவது நமது தார்மீக கடமை – மன்மோகன் சிங் !

சிறுபான்மையினர் அகதிகளாக வரும்போது குடியுரிமை வழங்குவது நமது தார்மீக கடமை – மன்மோகன் சிங் !

Share it if you like it

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்டம் சில நாட்களுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகின்றனர்.

குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சிஏஏ வை பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பேசிய காணொளி ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த காணொளியில் மன்மோகன் சிங் பேசியதாவது :-

அகதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். நாடு பிரிக்கப்பட்டபோது பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகினர்.இந்த சூழ்நிலையால் பாவப்பட்ட மக்கள் அகதிகளாக வரும்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது நமது தார்மீக கடமையாகும்.

https://x.com/vasudevakudumba/status/1767906654048092538?s=20


Share it if you like it