ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு… எஸ்.ஐ. உட்பட 4 பேர் பலி!

ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு… எஸ்.ஐ. உட்பட 4 பேர் பலி!

Share it if you like it

ஜெய்ப்பூர் – மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எஸ்.ஐ. உட்பட 4 பேர் பலியாகினர்.

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, திடீரென ரயிலில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பயணிகள் பதறியடித்துக் கொண்டு சென்று பார்த்தபோது, ரயிலில் இருந்து ஒரு போலீஸ்காரர் குதித்து தப்பி ஓடுவது தெரியவந்தது. பின்னர், சம்பவம் நடந்த ரயில் பெட்டியில் சென்று பார்த்தபோது, ஒரு எஸ்.ஐ. மற்றும் 3 பயணிகள் உயிரிழந்து கிடந்தனர்.

இதன் பிறகு,, ரயில்வே போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். இதில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரயில்வே பாதுகாப்புப் படையில் போலீஸ்காரராக பணிபுரியும் சேத்தன் சிங் என்பது தெரியவந்தது. இவரும், எஸ்.ஐ. டிகாராம் என்பவரும் ரயிலில் பயணித்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, காவலர் சேத்தன் சிங், எஸ்.ஐ.யை நோக்கி துப்பாக்கியை தூக்கி சுட முயன்றிருக்கிறார். இதைக் கண்ட பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றிருக்கின்றனர்.

ஆனால், கடும் ஆத்திரத்தில் இருந்த காவலர் சேத்தன் சிங், சப் இன்ஸ்பெக்டரை சுட்டதோடு, தடுக்க வந்த பயணிகளை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். இதில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகள் உயிரிழந்தனர். இதன் பிறகு, காவலர் சேத்தன் சிங், தாஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றிருக்கிறார். எனினும், சேத்தன் சிங்தை கைது செய்த ரயில்வே போலீஸார், அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில் எண் 12956-ல் 31.7.23 அன்று மாலை 5.23 மணிக்கு பி5 பெட்டியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த சி.டி.சேத்தன், பாதுகாப்பு இன்சார்ஜ் துணை எஸ்.ஐ, டிகா ராம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது உறுதி செய்யப்பட்டது. துணை எஸ்.ஐ. தவிர, 3 பொதுமக்களின் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டெபிள் பிடிபட்டார். வடக்கு டிசிபி ஜிஆர்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it