காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது எங்களது காங்கிரஸ் அரசு. ஆனால், மோடி அரசு அனுமதி அளித்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு பாரத பிரதமர் மோடிதான் தடை விதித்தது போலவும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு போராடி அனுமதி பெற்றிருப்பதை போலவும் சிலாகித்து சமூக வலைத்தளங்களில் உ.பி.ஸ்கள் பதிவுகளை போட்டு ஆர்கசம் அடைந்து வருகின்றனர். அதேசமயம், விஷயம் அறிந்தவர்களோ காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என்றும், இதை எதிர்த்து அ.தி.மு.க.தான் போராடி அனுமதி பெற்றது என்றும், தி.மு.க. உரிமை கொண்டாட எவ்வித அறுகதையும் இல்லை என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆகவே, இந்த விவகாரம் தொடர்பான விவாதம் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்திருக்கிறது.
உண்மையில் மோடிதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தாரா? ஸ்டாலின்தான் போராடி அனுமதி பெற்றாரா? என்பதை இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம்…
அதாவது, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, பீட்டா, புளூ கிராஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்ததோடு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த அறிவிப்பை வெளியிட்டது அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இதைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு இத்தடை அறிவிப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், அந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. அதேபோல, 2015-ம் ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அனுமதி அளித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் நீதிமன்றத்தை நாடவே, அரசின் அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டது. இதனால், அந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி, 2017-ம் ஆண்டு சென்னை மெரீனாவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அப்போது, ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புமாறு, அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக் கொண்டார். அதன்படி, அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கம்போல பீட்டா அமைப்பும், காங்கிரஸ் கட்சியினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில்தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க.வுக்கு துளிகூட சம்மந்தம் இல்லை. உண்மை இப்படி இருக்க, ஜல்லிக்கட்டு போட்டிக்கு மோடிதான் தடை விதித்தது போலவும், ஸ்டாலின்தான் தடையை உடைத்து அனுமதி பெற்றதைப் போலவும் சமூக வலைத்தளங்களில் உ.பி.ஸ்கள் பதிவுகளை வெளியிட்டு ஆர்கசம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு மோடி அரசு அனுமதி அளித்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டி விளையாட்டு என்று வர்ணித்து தடை அறிவிப்பை வெளியிட்டவருமான ஜெய்ராம் ரமேஷ், எதிர்ப்புத் தெரிவித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெறியாகி உ.பி.ஸ்களின் முகத்திரையை கிழித்து வருகிறது.