ஜம்மு காஷ்மீர் ‘தால்’ ஏரியில் ‘அலிகேட்டர்’! சதியா?

ஜம்மு காஷ்மீர் ‘தால்’ ஏரியில் ‘அலிகேட்டர்’! சதியா?

Share it if you like it

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள தால் ஏரியில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ‘அலிகேட்டர்’ இன வகை மீன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அலிகேட்டர் வகை மீன்கள் தமிழில் முதலை மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது முதலை போன்ற தலை மற்றும் கூர்மையான பற்களும், நீண்ட உடல் அமைப்பையும் கொண்டது. வட அமெரிக்க கடல் பகுதிகள்தான் இவற்றின் பூர்வீகம். ஆபத்தான மீன் இனமாக இது அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. இந்த வகை மீன்கள், மற்ற மீன் இனங்களை சாப்பிட்டு உயிர் வாழக் கூடியவை. இதனால், உள்நாட்டு மீன் இனங்களுக்கு இவற்றால் ஆபத்து ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். இவ்வகை மீன்கள் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைப்பதோடு, பொதுமக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால், இம்மீன்கள் குறித்து நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான தால் ஏரியில், அலிகேட்டர் வகை மீன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் டாக்டர் ஷபீகா பீர் கூறுகையில், “இந்த வகை மீன், தால் ஏரியில் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இது மற்ற மீன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவரை ஏரியில் 2 அலிகேட்டர் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மீனை யாராவது வேண்டுமென்றே ஏரியில் விட்டனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார். பாரத பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டிருப்பதால், இதுபோன்ற பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில், பயங்கரவாத ஆதரவு அமைப்பினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


Share it if you like it