ஜம்மு காஷ்மீரில் லவ் ஜிகாத்: இளம் பெண் டாக்டர் கொலை!

ஜம்மு காஷ்மீரில் லவ் ஜிகாத்: இளம் பெண் டாக்டர் கொலை!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் லவ் ஜிகாத் காரணமாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், சக மருத்துவர் ஜோஹர் மெஹ்மூத்தால் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் நகரமான தலாப் தில்லோ பகுதியைச் சேர்ந்தவர் சுமேதா ஷர்மா. ஜானிபுராவின் பாம்போஷ் காலனியைச் சேர்ந்தவர் ஜோஹர் மெஹ்மூத் கனாய். இருவரும் ஜம்முவின் புறநகர் பகுதியான செஹோராவிலுள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படித்திருக்கிறார்கள். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னர், லவ்ஜிகாத் என்கிற பெயரில் சுமேதாவை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார் ஜோஹர். இதன் பிறகு, சுமேதா எம்.டி.எஸ். படிப்பதற்காக டெல்லிக்குச் சென்று விட்டார். ஜோஹர் ஜம்முவிலேயே படித்திருக்கிறார்.

இந்த நிலையில், படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பிய சுமேதாவிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி இருக்கிறார் ஜோஹர். ஆனால், இதற்கு சுமேதா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜோஹர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நைசாகப் பேசி சுமேதாவை தனது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். சுமேதாவும் அங்கு சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் தயாராக வைத்திருந்த கத்தியை எடுத்து சுமேதாவின் அடி வயிற்றில் பலமுறை குத்தி இருக்கிறார் ஜோஹர்.

இந்த கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சுமேதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதன் பிறகு, தனது முகநூல் பக்கத்தில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய ஜோஹர், தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி இருக்கிறார். இதையடுத்து, அவரது நண்பர்களும், உறவினர்களும் ஜோஹரின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அங்கு ஜோஹர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு பக்காவாக நடத்தி இருக்கிறார். உடனே, அவரை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த சூழலில், இச்சம்பவத்தை கண்டித்து பஜ்ரங் தளம் மற்றும் ஹிந்து அமைப்பினர் ஜம்முவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது திட்டமிட்ட “லவ் ஜிஹாத்” கொலை என்று குற்றம்சாட்டி இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் ராகேஷ் பஷ்ராங்கி, இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுக்கவும், ஜம்முவில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதை எதிர்த்து அரசு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.


Share it if you like it